தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அஜய்குமார் மண்டல் ( 26). இவரும் ஒரிசா மாநிலம் இந்தபூர் பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பந்தனாமாஜியும் (22) ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர்.
அஜய்குமாரின் மனைவி அவ்வப்போது ரம்மி விளையாடி அதிக அளவு பணத்தை இழந்து வந்துள்ளார். இதற்கு கணவன் ஆன்லைன் ரம்மி விளையாட்டை கைவிடும்படி மனைவியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அடிக்கடி இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மனைவியின் வீட்டிற்கும் போன் மூலம் மனைவியை கண்டிக்கும்படி கூறியுள்ளார்.
இதையும் படிக்க : திருச்சியை மிரள வைத்த 5 கொலைகள்... கண்களை மூடிய கள்ளக்காதல்..
இதுவரை அஜய்குமாரின் மனைவி பந்தனாமாஜி ஆன்லைன் ரம்மியால் 70 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைமுடைந்த பந்தனாமாஜி வீட்டில் கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து கணவன் பார்க்கும் போது உயிரிழந்த மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : செந்தில் சண்முகசெல்வம் (தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl dead, Online rummy, Sucide