முகப்பு /செய்தி /தென்காசி / EXCLUSIVE: தென்காசி தீண்டாமை விவகாரம்: தமிழகத்தில் இதுவரை பயன்படுத்தாத பிரிவு மூலம் நடவடிக்கை

EXCLUSIVE: தென்காசி தீண்டாமை விவகாரம்: தமிழகத்தில் இதுவரை பயன்படுத்தாத பிரிவு மூலம் நடவடிக்கை

தென்காசி விவகாரம்

தென்காசி விவகாரம்

தென்காசி தீண்டாமை விவகாரத்தில் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த காவல்துறை முடிவு எனத் தகவல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் தமிழகத்தில் இதுவரை பயன்படுத்தாத ஒரு பிரிவை

பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம் பஞ்சாகுளம்  கிராமத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வின் போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும் குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலியும் கிண்டலும் பேசியதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பிரிவு ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக் கூடாது எனவும் தீர்மானம்  போடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஒரு பிரிவு ஊர்நாட்டமை மகேஷ்குமார் என்பவர் கடைக்கு வந்த ஒரு பிரிவு பள்ளி மாணவர்கள் வந்து தின்பண்டம் வாங்க வந்தபோது உங்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் என கூறி அந்த காட்சியை வீடியோ எடுத்து சமுதாய நாட்டாமையான மகேஸ்வரன்(55) அவரது சமுதாய வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதலில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி என்பவரை முதலில் கைது செய்த காவல்துறையினர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பதுங்கி இருந்த மகேஸ்வரனை இரண்டாவதாக கைது செய்தனர்.

' isDesktop="true" id="803935" youtubeid="nZbIzV60P9k" category="tenkasi">

மேலும் இந்த சாதிய தீண்டாமை விதைக்க உதவியாக இருந்த மளிகை கடையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களின் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி முன்னிலையில் சங்கரன்கோவில் வட்டாட்சியர் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கடையை இழுத்து மூடி சீல் வைத்தனர்.

Also read: 40-ம் நமதே, நாடும் நமதே!! ஸ்டாலினின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

இந்த விவகாரத்தில் 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 147,294,506, 153,377, உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்த நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முருகன் (45),குமார்(40),சுதா (45) ஆகிய மூவரை கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இந்த பிரிவை ஒரு முறை கூட பயன்படுத்தியது இல்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="803935" youtubeid="6herAe3e9gU" category="tenkasi">

மேலும் இந்த பிரிவை பயன்படுத்தினால் குற்றம் சாட்டப்பட்டோர் குறிப்பிட்ட காலத்திற்கு பாஞ்சாங்குளம்  ஊரில் நுழைய தடை விதிக்கப்படும் என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சாதி ஒடுக்குமுறையை தடுக்கவும் , தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

First published:

Tags: Breaking News, Caste, National SC ST commission, News18 Tamil Nadu, Scheduled caste, Tenkasi