ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசி: நிலத்தை உழுத போது டிராக்டரில் சிக்கிய நடராஜர் சிலை.. பஜனை பாடி வழிபட்ட மக்கள்!

தென்காசி: நிலத்தை உழுத போது டிராக்டரில் சிக்கிய நடராஜர் சிலை.. பஜனை பாடி வழிபட்ட மக்கள்!

நடராஜர் சிலை கண்டெடுப்பு

நடராஜர் சிலை கண்டெடுப்பு

சிலையை கைப்பற்றிய தாசில்தார் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் அளித்துள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி அருகே விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்த போது நடராஜர் சிலை தென்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரால் நிலத்தை உழுதனர். அப்போது நடராஜர் சிலை ஒன்று தென்பட்டது.

உடனே அதை வெளியே எடுத்து, ராமநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிவபாக்கிய விநாயகர் கோவிலில் வைத்து, சிலைக்கு மாலை மற்றும் பட்டாடை அணிவித்து பூஜை செய்தனர். மேலும் சிலை முன்பு அமர்ந்து பஜனை பாடி வழிபட்டு வருகின்றனர்.

சுமார் இரண்டரை அடி உயரமும், 52 கிலோ எடையும் கொண்ட அந்த சிலை ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று காலை இது குறித்து சிவகிரி தாசில்தார் செல்வகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ | தென்காசியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்.. வேடிக்கை பார்க்கிறதா நகராட்சி?

தொடர்ந்து தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி ஆகியோர்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த நிலத்தில்  சிலை வந்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை செய்தனர். இதையடுத்து அவர்கள் இந்த சிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

First published:

Tags: Ancient statues, Local News, Tenkasi, The idols