ஹோம் /நியூஸ் /தென்காசி /

சுரண்டை பேருந்து நிலையத்தில் துரத்தி, துரத்தி கல்லூரி மாணவர்களை புரட்டி எடுத்த மர்ம நபர்கள்...

சுரண்டை பேருந்து நிலையத்தில் துரத்தி, துரத்தி கல்லூரி மாணவர்களை புரட்டி எடுத்த மர்ம நபர்கள்...

மாணவர்களை தாக்கிய மர்ம நபர்கள்

மாணவர்களை தாக்கிய மர்ம நபர்கள்

Tenkasi News : இந்த தகராறில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவர்களை பேருந்து நிலையத்தில் ஓட,ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  இந்நிலையில், நேற்று கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் சுரண்டை பேருந்து நிலையத்திற்கு மாலையில் திரண்டு வந்து பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கல்லூரி மாணவிகளை அப்பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அந்த மர்ம நபர்களை தட்டிக்கேட்டதாக தெரிகிறது.

  இந்த தகராறில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவர்களை பேருந்து நிலையத்தில் ஓட,ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் அதிகரிக்கவே அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  இதையும் படிங்க : கரூரில் விஷவாயு தாக்கி மூவர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்.. மேலும் ஒருவரின் உடல் இன்று கண்டெடுப்பு

  இந்த தாக்குதல் சம்பவத்தை அருகில் இருந்த மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் எடுத்து பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பிரச்சனை முடிவதற்கு அரசு கல்லூரி மாணவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்சை இன்று சந்தித்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேபோல் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆர்வத்துடன் படிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சுரண்டை பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர் : செந்தில் - தென்காசி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tenkasi