முகப்பு /செய்தி /தென்காசி / ஏய் எப்புட்றா.. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் மாடர்ன் வீடு.. தென்காசியில் புதுமை

ஏய் எப்புட்றா.. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் மாடர்ன் வீடு.. தென்காசியில் புதுமை

மாடர்ன் வீடு

மாடர்ன் வீடு

Model House : தென்காசியில் அட்டை பெட்டிகளை கவிழ்த்து போட்டு அந்தரங்கில் தொங்கியபடி கட்டப்பட்ட வீடு பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கின்றன. அந்த கனவு வீட்டை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பயணித்து வருகின்றனர். ஆனால் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெல்கம் நகர் பகுதியில் ஒருவர் வீடு ஒன்றை கட்டியுள்ளார். பொதுவாக வீடு வலுவாக இருக்க வேண்டும், இடிந்து விழுந்து விடக்கூடாது, நல்ல சிமெண்ட், கம்பி போன்ற மூலப் பொருட்களால் கம்பீரமாக கட்ட வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள்.

ஆனால் இவரோ தனது வீட்டை பெட்டிகள் அடுக்கி வைப்பது போல் கட்டி உள்ளார். அப்படி அடிக்கி வைக்கப்பட்ட பெட்டிகள் என்றாலும் பரவாயில்லை. ஒழுங்காக அடுக்காமல் சரிந்து கிடக்கும் வகையில் தழைகீழாக அந்தரத்தில் தொங்கியபடி கட்டி உள்ளார்.

இதனை  தென்காசி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.  இது மட்டும் இல்லாது அந்த வழியே செல்லும் பொதுமக்கள் அந்த வீட்டின் முன் நின்று செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

செய்தியாளர் : செந்தில் - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi