முகப்பு /செய்தி /தென்காசி / கிருத்திகா கடத்தல் விவகாரம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கிருத்திகா கடத்தல் விவகாரம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கிருத்திகா, நவீன்

கிருத்திகா, நவீன்

ஆரம்ப கட்டத்தில் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் இளம்பெண் கிருத்திகா கடத்தப்பட்ட விவகாரத்தில், குற்றாலம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித்தும், அதே பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநில தொழிலதிபரின் மகள் கிருத்திகாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்த சில நாட்களில் உறவினர்களுடன் வந்த கிருத்திகாவின் பெற்றோர், வினித்தை தாக்கிவிட்டு, கிருத்திகாவை இழுத்துச் சென்றனர். இது தொடர்பாக, வினித் தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, கேரளாவில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கிருத்திகா தெரிவித்ததையடுத்து, அவர் பாதுகாப்பாக அங்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு, வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

இவ்வழக்கின் ஆரம்ப கட்டத்தில் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குற்றால காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், அலெக்ஸை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Kidnap, Police suspended, Tenkasi