முகப்பு /செய்தி /தென்காசி / தென்காசியில் பெண் ரயில்வே ஊழியரிடம் கேரள இளைஞர் சில்மிஷம்.. தட்டி தூக்கிய தமிழக போலீஸ்!

தென்காசியில் பெண் ரயில்வே ஊழியரிடம் கேரள இளைஞர் சில்மிஷம்.. தட்டி தூக்கிய தமிழக போலீஸ்!

இளைஞர் கைது

இளைஞர் கைது

Tenkasi arrest | தென்காசியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வரும் கேரள இளம்பெண்ணிடம், கேரள வாலிபர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி ரயில்வேயில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற கேரள வாலிபரை தமிழக போலீசார் கைது செய்தனர் 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள  தென்காசி- நெல்லை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக கேரளா மாநிலத்தை சேர்ந்த  நித்யா சந்திரன் என்ற பெண் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 16ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர், பணியில் இருந்த போது, அந்தப்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில்வே ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற நபர்கள் யார்? என்பது குறித்து அக்கம் பக்கத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர் அணிந்திருந்த சட்டை, பேண்ட், உள்ளிட்டவைகள் குறித்து 10 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழக கேரள எல்லையான புளியரை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அனீஸ் (27) என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில்,  ரயில்வே ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றதை ஒப்புகொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்து தொடர் விசாரணை செய்ததில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் தாலுகா வாழவிளை பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் அனீஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விசாரணையின் போது, அனீஸ், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்துள்ளார். அப்பொழுது, பாவூர்சத்திரம் பகுதியில் தங்கிருந்தபோது, தினமும் நித்யா சந்திரனை நோட்டமிட்டுள்ளார். பெயிண்ட் அடிக்கும் பணி முடிந்து கேரளாவிற்கு திரும்ப செல்ல இருந்த சூழலில், நித்யா சந்திரன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட அனிஸ், தனியாக இருந்தவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அந்தப்பெண் கூச்சலிடவே பயத்தில் அங்கிருந்து அனிஸ் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனீஸ் மீது கேரள மாநிலம் குன்னிகோடு காவல் நிலையத்தில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேரளாவை சேர்ந்த பெண் ரயில்வே ஊழியரை கேரளாவை சேர்ந்த ஒரு நபரே கற்பழிக்க முயற்சி செய்து மாட்டிக் கொண்ட சம்பவம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: செந்தில், தென்காசி.

First published:

Tags: Crime News, Local News, Sexual abuse, Tenkasi