Home /News /tenkasi /

கேரளா பந்த் எதிரொலி.. தமிழகத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி..

கேரளா பந்த் எதிரொலி.. தமிழகத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி..

தென்காசி பேருந்து நிலையம்

தென்காசி பேருந்து நிலையம்

கேரளாவில் இருந்து தென்காசிக்கு வரும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 3 மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India
    தென்காசியில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு குறைவான பேருந்துகள் இயக்கம் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளில் நேற்று நாடுமுழுவதும் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை கண்டித்து பல பகுதிகளில் கண்டம் தெரிவித்து மறியல் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கேரள மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு கொட்டாரக்கரை, அச்சன்கோவில், கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், எர்ணாகுளம், குருவாயூர், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பேருந்து சேவைகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வரும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 3 மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் வருகையும் குறைவாக காணப்படுவதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Also Read : PFI அமைப்பினர் பந்த்.. கலவரம்... கல்வீச்சு.. பேருந்துகள் உடைப்பு... கேரளாவில் பதற்றம்

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில்: கேரளாவில் தற்போது முழு  கடையடைப்பு ஏற்பட்டு சூழ்நிலையில் இங்கிருந்து குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் மேலும் பயணிகள் கூட்டம் வெகு குறைவாகவே காணப்படுவதால் பேருந்து நிலையம் வழிச்சோடி காணப்படுகிறது மேலும் சிறு வியாபாரி என்பதால் அச்சத்துடன் பயணம் செய்வதாகவே தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் கேரள போக்குவரத்து பேருந்து ஓட்டுநர் கூறுகையில்: தற்போது அங்கு நிலவிவரும் போராட்டத்தால் பல பகுதிகளில் பேருந்துகளின் கண்ணாடியில் உடைக்கப்பட்ட நிலையில் ஓட்டுனர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கி வருவதாகவும் இதனால் கடும் அச்சத்துடன் தான் வேலை செய்வதாகவும் அவர் கூறினார்.

    செய்தியாளர் : ச.செந்தில் ( தென்காசி)
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Bandh, Kerala

    அடுத்த செய்தி