ஹோம் /நியூஸ் /தென்காசி /

3 பேரை கடித்த கரடிக்கு ரேபிஸ் நோய் தொற்று... தடுப்பூசி போட வனத்துறையினர் அறிவுறுத்தல்!

3 பேரை கடித்த கரடிக்கு ரேபிஸ் நோய் தொற்று... தடுப்பூசி போட வனத்துறையினர் அறிவுறுத்தல்!

இறந்துபோன கரடி

இறந்துபோன கரடி

Tenkasi News | பிரேத பரிசோதனைக்கு பின் களக்காடு அருகே அந்த கரடியின் உடல் எரிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6ம் தேதி மசாலா வியாபாரி வைகுண்டமணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோரை  வழி மறித்து ஒற்றை கரடி கடுமையாக தாக்கியது.

  இதையடுத்து 3 பேரை தாக்கிய சுமார் 10 வயது பெண் கரடியை வனத்துறையினர் அன்று இரவே மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து மறுநாள் களக்காடு புலிகள் முண்டந்துறை பகுதியான செங்கல்தேரி என்ற அடர் வனப்பகுதியில் கரடி விடப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அந்த கரடி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் களக்காடு அருகே அந்த கரடியின் உடல் எரிக்கப்பட்டது.

  இதையும் படிங்க : லட்சங்களில் லோன் தருவதாக மோசடி.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

  இந்நிலையில், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், அந்த கரடிக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி ரேபிஸ் என்னும் வெறிநோய் பாதிப்பும் இருந்ததால் ஆக்ரோஷத்துடன் மனிதர்களை தாக்கியுள்ளதாக  வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், கரடியை தூக்கிச்சென்றவர்கள் மற்றும் எரியூட்டப்பட்ட நிலையில் அப்போது கரடி தொட்டு தூக்கிய வனத்துறையினர் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும்  மருத்துவ துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர் : செந்தில் - தென்காசி 

  Published by:Karthi K
  First published:

  Tags: Tenkasi