ஹோம் /நியூஸ் /தென்காசி /

குற்றால அருவிகளில் குளிக்க முடியுமா... தற்போதைய நிலவரம் என்ன?

குற்றால அருவிகளில் குளிக்க முடியுமா... தற்போதைய நிலவரம் என்ன?

குற்றாலம்

குற்றாலம்

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் குளிக்க முடியுமா? தற்போதை நிலவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையடுத்து, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கு குறையாததால் தடை நீடிக்கப்பட்டது. இதன் பின்னர் அருவிகளில் வெள்ள பெருக்கு குறைந்ததால் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தடை விலகிக் கொள்ளப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், நேற்றும் (புதன் கிழமை) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

எனினும் ஐந்தருவி மற்றும் புலியருவியில் ஆகிய இடங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் அஙகு சென்று குளித்து மகிழ்கின்றனர். இது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகமாக காணப்படுகின்றது.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi