முகப்பு /செய்தி /தென்காசி / ஆடாத சாமிகளையும் ஆடவைக்கும் வில்லுப்பாட்டு..! வில்லிசையில் கவனம் ஈர்க்கும் மாதவி

ஆடாத சாமிகளையும் ஆடவைக்கும் வில்லுப்பாட்டு..! வில்லிசையில் கவனம் ஈர்க்கும் மாதவி

வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி

வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி

Villu Pattu Madhavi : வில்லுப்பாட்டு கலையை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே மாதவியின் லட்சியமாக இருக்கிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கிராமிய கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு இசைக்கு உடுக்கை குடம்  கொண்டு படிக்கப்படும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் முக்கிய கலையாக இருந்து வருகிறது.

மதுரைக்கு தெற்கு கோயில் திருவிழாக்களில் வில்லிசை பாட்டு தலைசிறந்த பக்தி நிகழ்ச்சியாகவும் கடவுளைப் போற்றிப் பாடும் இந்த வில்லிசைப்பாட்டிற்கு மயங்காத சாமிகளே இல்லை என்று கூறலாம் ஆடாத சாமிகளையும் ஆடவைக்கும் வில்லிசை கலைக்கு கிராமங்களில் முக்கியத்துவம் உண்டு. ஆனால் காலப்போக்கில் கோயில் திருவிழாக்களில் பாட்டு கச்சேரி செண்டை மேளம் பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசை நிகழ்ச்சிகளின் வரவால் கிராமிய கலையான வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் குறைந்தது அழியும்  விளிம்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குட்டம் பகுதியைச் சேர்ந்த  மாதவி எனபவர், வில்லுப்பாட்டு மீது ஏற்பட்ட அதீத காதல் காரணமாக தனது 14 வயது முதல் அதை முறையாக கற்று முழு நேர வில்லுப்பாட்டு கலைஞராக உருவெடுத்துள்ளார்.  வில்லுப்பாட்டு மீதான தனது காதலை வீட்டில் தெரியப்படுத்த முதலில் மறுப்பு தெரிவித்த பெற்றோர் பின்னாளில் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்து மூத்த வில்லிசை கலைஞர்களிடம்  முறைப்படி வில்லுப்பாட்டு கற்க மகளை அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தை பருவத்திலேயே வில்லிசை கலைஞராக  உருவெடுத்து மாதவியின் முதல் அரங்கேற்றம் அவரது சொந்த ஊரான அச்சங்குட்டத்தில் அம்மன் கோயில் அரங்கேறியது. முதல் அரங்கேற்றம் செய்த போது மாதவிக்கு வெறும் 14 வயது தான் ஆகியிருந்தது. முதல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பக்கத்து ஊர்களில் வில்லிசை பாட ஊர் மக்கள் அழைத்தனர்.

வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி

தொடர்ந்து உள்ளூர் மட்டுமல்லாமல் திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி திருச்சி போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் தற்போது வரை நான்கு ஆண்டுகளில் மாதவி  300-க்கும் மேற்பட்ட வில்லிசை கச்சேரி நடத்தி வருகிறார்.  மாதவி வில்லுப்பாட்டு என்றாலே திருவிழாவுக்கே செல்லாதவர்கள் கூட அன்று கோயிலில் குடியிருப்பார்கள் அந்த அளவுக்கு தனது இளம்  வயதிலேயே வில்லிசைக் கலையில் புகழ்பெற்று விளங்கும் மாதவிக்கு வில்லுப்பாட்டு கலையை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது

செய்தியாளர்: ச.செந்தில் (தென்காசி)

First published:

Tags: Festival, Tamil News, Tenkasi, Women's Day