முகப்பு /செய்தி /தென்காசி / அதிமுகவின் நிலைமையை பார்த்தால் எனக்கு கவலையாக உள்ளது: டிடிவி தினகரன்

அதிமுகவின் நிலைமையை பார்த்தால் எனக்கு கவலையாக உள்ளது: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

திமுக கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை செய்ய தவறி விட்டார்கள் என தென்காசியில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் குற்றசாட்டினார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

அதிமுகவின் நிலைமையை பார்த்தால் எனக்கு கவலையாக உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,” இந்த இயக்கத்தில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். சுயநலத்திற்காக நம்மை விட்டு சிலர் பிரிந்து சென்றார்கள்.  அவர்கள் பிரிந்து சென்றது நன்மைதான். ஜாதியை பார்த்து நான் செயல்படுபவன் அல்ல. புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்தவர்கள் நாங்கள். ஜாதி, மதங்களை பார்ப்பதில்லை. அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர அனைவரும் உழைக்க வேண்டும்” என்றார்.

மேலும், “ தற்போது அம்மாவின் கட்சியின் நிலைமை பார்த்தால் எனக்கு கவலையாக உள்ளது. அங்கு பழம் தின்று கொட்டையை போட்டவர்கள் இருக்கிறார்கள். இதுவரை அதிமுக பொதுக்குழுவில் இதுபோல பிரச்னைகள் எதுவுமே நடந்ததில்லை. குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமைத்தால் மட்டும்தான் அதிமுகவை மீட்டெடுக்க முடியும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர்,” அம்மா மக்கள் முன்னேற்றக் களகத்தை வளர்ப்பது உங்கள் கடமை. இந்த கட்சி வளர்ந்தால்தான் அம்மாவின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால்தான் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க முடியும்.

பழனிச்சாமி ஆட்சி சரி இல்லாத காரணத்தினால் தற்போது திமுகவுக்கு பொதுமக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள். ஆனால் திமுக கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை செய்ய தவறி விட்டார்கள். எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திறம்பட செயல்பட வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

Also see... கோவையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றம்...

இந்த கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி 

First published:

Tags: AMMK, DMK, Tenkasi, TTV Dinakaran