ஹோம் /நியூஸ் /தென்காசி /

சட்டவிரோதமாக ரூ.41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல கழிவுகள் பதுக்கல்... தென்காசியில் தந்தை, மகன் கைது!

சட்டவிரோதமாக ரூ.41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல கழிவுகள் பதுக்கல்... தென்காசியில் தந்தை, மகன் கைது!

கைதான தந்தை, மகன்

கைதான தந்தை, மகன்

Tenkasi News : செங்கோட்டையில் அம்பர்கிரிஸ் (திமிங்கல கழிவு) வைத்திருந்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை தென்பொத்தை சாலையில் மாவடிக்கல் தோப்பு என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் அம்பர்கிரிஸ் (திமிங்கல கழிவு) இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 41 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 770 கிராம்  ஆம்பர் கீரீஸ் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

  இதுதொடர்பாக தங்கச்சன்(65), வர்க்கீஸ்(35) ஆகிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதையும் படிங்க : ஒருமுறை பாதித்தவர்களை மீண்டும் 'மெட்ராஸ் ஐ' பாதிக்குமா? - கண் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்!

  இதைத்தொடர்ந்து குற்றாலம் வனசரக அலுவலர் பிரகாஷ் தந்தை, மகன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  மேலும் இது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது. இதை யாருக்கும் விற்பனை செய்யகொண்டுவந்துள்ளதா அல்லது உண்மையிலேயே இது திமிங்க கழிவா என பல்வேறு  கோணங்களில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : செந்தில் - தென்காசி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tenkasi