Home /News /tenkasi /

குற்றால அருவியில் குளிக்கத் தடை.. சாரல் மழையில் செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குற்றால அருவியில் குளிக்கத் தடை.. சாரல் மழையில் செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குற்றாலம்

குற்றாலம்

Courtallam falls : குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாரல் மழையில் நனைந்தபடி செல்பி எடுத்து மகிழ்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக ஆர்பரித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும் இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பின்னர்  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர்.

    இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

    இந்த நிலையில்  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பெய்து வரும் தொடர்  மழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு நலன்கருதி போலீசார் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்ததோடு சாரல் மழையில் நனைந்தபடி செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். தொடர்  வெள்ளப்பெருக்கால் குற்றாலம் பகுதியுள்ள கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றது வியாபாரிகளும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    செய்தியாளர்: ச.செந்தில், ( தென்காசி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Courtallam, Falls, Tamilnadu

    அடுத்த செய்தி