தென்காசி மாவட்டம் கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் வினித்(22), அதே பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா பட்டேல் (20). இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லாத நிலையில் கிருத்திகா பட்டேலை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி வீடியோ தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், உறவினர்கள் என 7 பேர் மீது வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கிருத்திகாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கிருத்திகா தனக்கு வேறு திருமணம் ஆகி விட்டதாகவும் தான் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறும் வீடியோ இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன் விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என கிருத்திகா கூறினார்.
இதனை கண்டு பதறிப்போன வினித், தன் மனைவி கிருத்திகா முழு சம்மதத்துடனே தன்னை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது பெற்றோரே மிரட்டி வேறு திருமணம் செய்து வைத்ததாகவும், மிரட்டியே கிருத்திகாவை வீடியோ பதிவு செய்ய வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மனைவி வெளியிட்ட வீடியோவில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து கிருத்திகா வினித்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தன் பெற்றோர் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும், எனவும் வாபஸ் வாங்கும் பட்சத்தில் உனது வாழ்க்கை மற்றும் எனது வாழ்க்கை நன்றாக இருக்கும் என வினித்திடம் பேசும் ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Inter caste marriage, Love marriage, Tenkasi