தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இந்த அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக அனைத்து மத்திய (யுபிஎஸ்சி) மற்றும் மாநில (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது எஸ்.எஸ்.சி., சி.ஹெச்.எஸ்.எல். தகுதித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அலுவலக வளாகத்திலேயே அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நேரடியாக நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் மாதிரி தேர்வுகள், துறை சார்ந்த வல்லுநர்களின் ஊக்க உரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!
போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi, TNPSC