தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டர் பகுதியில், ரஹமத் புரோட்டா ஸ்டால் என்ற உணவகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு அடுத்தபடியாக உணவு சாப்பிட சென்றால் அது பார்டர் ரஹ்மத் புரோட்டா கடையாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு பிரபலமான பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை, சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலம்.
இந்தநிலையில் ரஹ்மத் பரோட்டா கடையில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் புகார் எண் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் சென்றன. இதன் எதிரொலியாக, தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ரஹ்மத் புரோட்டா கடையை சோதனையிட அங்கு நேற்று சென்றனர். அப்போது அங்கிருந்த உணவக ஊழியர்கள் கடைக்கு சொந்தமான பொருட்கள் சேமித்து வைத்திருந்த குடோன் மற்றும் விற்பனைக்கு தயாராகி இருந்த பிரியாணியையும் மூடிவைத்து கடையையும் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இதனால் குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைத்தனர். தொடர்ந்து மாலையில் சீலை அகற்றி குடோனை சோதனையிட்டபோது, அங்கு 200 கிலோ அளவுக்கு கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை அழிக்க உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த சோதனை குறித்து கடை முதலாளியிடம் கேட்டபோது எங்கள் கடையில் தரமான பொருட்கள் கொண்டு மூன்று தலைமுறைக்கு மேலாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்தவர்கள் கடையில் சாப்பிட வரும் வாடிக்கையாளரிடம் கேளுங்கள் என்ன தெரிவித்தார். ஒருபுறம் அதிகாரிகள் சோதனை மறுபுறத்தில் கடை விற்பனை நடைபெற்ற நிலையில் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து புரோட்டாவை சாப்பிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : செந்தில் சண்முகசெல்வம் (தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hotel Food, Parotta, Seized, Tenkasi