ஹோம் /நியூஸ் /தென்காசி /

சீசன் முடிந்தும் குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்... அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!

சீசன் முடிந்தும் குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்... அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!

குற்றாலம்

குற்றாலம்

குற்றாலத்தில் கூடும் கூட்டம் சீசன் முடிந்த நிலையிலும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வருவதினால் இங்கு வரும் பயணிகள் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை பெய்ததின் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வந்தது. இதனை தொடர்ந்து இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

  இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதியான குற்றால மலைப்பகுதியில் மழை பெய்து வருவதினால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர்வரத்து துவங்கியுள்ளது.

  இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது தற்போது சீசன் முடிந்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து உள்ளது.

  Also see... முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்...

  இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளதால் அதிக நேரம் குளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர் சாரல் மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்...

   செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Courtallam, Tenkasi