வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வாயிலாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.
அதில், தென்காசி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வாயிலாக உற்பத்தியாளர்கள் நிறுவனம், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு ஆலோசகர் / தொழில் நுட்ப ஆலோசகர் குழு உறுப்பினர் (ஒரு மண்டலத்திற்கு 5 பேர் வீதம்) பணியமர்த்தப்படவுள்ளார்கள்.
இதற்கு பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த (Farm & Off- Farm) பண்ணை சாராத (Non-Farm) தொழிலில் அனுபவமும், தொழில்நுட்ப திறனும் உள்ள நபர்கள் https://www.tnrtp.org எனும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணையதளத்தில் 27.12.2022 தேதி வரை குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தகுதிகள்:
தொழில் நுட்ப ஆலோசகர் பணிகளுக்கு, பண்ணை தொழில் நெல், கடலை, பயர் வகைகள், தென்னை உற்பத்தி கல்வித்தகுதியும், பண்ணை சார் தொழில், கல்வித் தகுதியும் மற்றும் பண்ணை சாரா தொழில் (பாரம்பரிய கைவினைப் பொருட்கள், அப்பளம், சர்க்கரை, தையல், மண்பாண்டம், பனை இலை பொருட்கள், கடல் சங்கு மற்றும் வெல்டிங்) கல்வித் தகுதியும் மற்றும் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டு அனுபவமும் இருக்க வேண்டும்.
Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!
இந்த திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனைவோர், குழு தொழில், உற்பத்தியாளர் குழு மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றுக்கு தொழில் சார் ஆலோசனைகள் வழங்கவும், நடைமுறையில் உள்ள உற்பத்தி சார் தொழில் நுட்பங்களை வழங்கவும், மதிப்புக் கூட்டு செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த மண்டல ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு உரிய தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job Vacancy, Local News, Tenkasi