ஹோம் /நியூஸ் /தென்காசி /

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருசம் ஆச்சு... இன்னும் கடந்த ஆட்சியை விமர்சிப்பதா? கிருஷ்ணசாமி கண்டனம்

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருசம் ஆச்சு... இன்னும் கடந்த ஆட்சியை விமர்சிப்பதா? கிருஷ்ணசாமி கண்டனம்

கிருஷ்ணசாமி - 
முதல்வர் ஸ்டாலின்

கிருஷ்ணசாமி - முதல்வர் ஸ்டாலின்

மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் நடக்காத காரியம், திமுக முதலில் தமிழகம் வேறு இந்தியா வேறு என்று பேசுவதை நிறுத்த வேண்டும்” என கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளான பிறகும் எதிர்க்கட்சியை தொடர்ந்து குறை சொல்லி பழைய பல்லவியை பாடி வருகிறது என்றும் மழை வெள்ள பாதிப்புகளில் திமுக தோற்றுவிட்டது என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக சாடினார்.

  மின் கட்டண உயர்வை கண்டித்து தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்காக  தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கோவை மாநகரம் மிக பெரிய தொழில் வர்த்தகத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் ஏற்றதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பயங்கரவாத செயலுக்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது. இது கோவைக்கான ஆபத்து இல்லை தமிழகத்திற்கு ஆபத்தாகும். கோவையில் நிரந்தர அமைதி வேண்டி நவம்பர் 17ஆம் தேதி அமைதி பேரணி நடைபெறும்” என தெரிவித்தார்.

  இதையும் படிக : ஆவின் பால் விலை உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்!

  மேலும், குற்றாலம் சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு உகந்த இடமாக உள்ளது. தற்போது கனிம வளம் கொள்ளை காரணமாக இதன் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. எனவே தென்காசி திமுக மாவட்ட நிர்வாகிகள் வீடுகளில் சோதனை செய்தாலே குற்றாலத்தின் இயற்கை வளங்கள் மீட்கப்படும். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் நடக்காத காரியம், திமுக முதலில் தமிழகம் வேறு இந்தியா வேறு என்று பேசுவதை நிறுத்த வேண்டும்” என கூறினார்.

  தொடர்ந்து, “திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களான  பிறகும் கடந்த ஆட்சியை குற்றம் சாட்டி, பழைய  பல்லவியை பாடி வருகிறது. திமுக வாக்குறுதி, மழை வெள்ள பாதிப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் தோற்றுவிட்டது. இதைவிட மோசமான பிரச்சாரத்தை எந்த கட்சியாலும் செய்ய முடியாது” என கடுமையாக சாடினார்.

  தென்காசி செய்தியாளர் : ச. செந்தில்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: ADMK, CM MK Stalin, DMK, Dr Krishnasamy, Puthiya Tamilagam