Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தென்காசி /

’கஞ்சா புகைத்தால் போலீசிடம் சொல்லுவேன்’ - மிரட்டிய வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பன்!

’கஞ்சா புகைத்தால் போலீசிடம் சொல்லுவேன்’ - மிரட்டிய வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பன்!

கொலையான வாலிபர்

கொலையான வாலிபர்

Tenkasi News : தென்காசியில் நண்பர்களுக்கு இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டிக்கொலை செய்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் காமராஜர் காலனியை சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார் (22), பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் செல்வகுமார்(33) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இரண்டு பேரும் அடிக்கடி சந்திக்கும்போதெல்லாம் மது அருந்துவது வழக்கம்.

அதன்படி இன்று இருவரும் மது அருந்தினர். அப்போது செல்வகுமார் தான் வைத்திருந்த கஞ்சாவையும் புகைத்தார். இதை சிவகுமார் தட்டிக்கேட்டுள்ளார். மேலும் கஞ்சாவை வைத்திருப்பதை போலீசாரிடம் கூறுவேன் என்று சிவக்குமார் மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மின்நுகர்வோர்களுக்கு ஆதார் எண் இணைப்பு.. கோவையில் 154 இடங்களில் சிறப்பு முகாம்...

இதனால் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த செல்வகுமார் அரிவாளால் சிவகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த செல்வகுமார் மற்றும் அவரது நண்பரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா புகைப்பது குறித்து போலீசிடம் கூறுவேன் என்று மிரட்டியதால் தான் சிவகுமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது 2 பேருக்கும் வேறு ஏதேனும் முன் விரோதம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பிடியில் சிக்கி உள்ள செல்வக்குமார் மீது கொலை உள்ளிட்டு 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகிரியில் மது போதையில் டிப்ளமோ பட்டதாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : செந்தில் - தென்காசி

First published:

Tags: Crime News, Local News, Tenkasi