Home /News /tenkasi /

குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

Coutrallam Falls | தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பால் மிகுந்த உற்சாகத்துடன் பயணிக்க வலம் வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைக்கட்டும் இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பின்னர்  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர்.
    இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததன் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

    Also Read : ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி


    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக மழை பெய்யாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில்
    நேற்று முன்தினம் முதல்  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சீசன் முழு அளவை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செய்தியாளர் : ச.செந்தில் (தென்காசி)

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Courtallam, Tamilnadu, Tenkasi, Tourist spots

    அடுத்த செய்தி