Home /News /tenkasi /

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

குற்றால அருவி

குற்றால அருவி

பாதுகாப்பு வளவை தாண்டி ஆர்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கால்  சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Courtalam (Courtallam) | Tenkasi
    குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி , ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் ஆனந்தமாய் குளிப்பதற்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக அனைத்து அருவிகளின் தண்ணீர் வரத்து துவங்கியதை தொடர்ந்து சீசன் களை கட்டியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத காரணத்தினால் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்த காணப்பட்டது. மேலும் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

    குற்றால அருவி


    இந்த சூழலில் நேற்று மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளவை தாண்டி  தண்ணீர் கொட்டுக்கிறது. ஆர்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கால்  சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மேலும் புலியருவி,சிற்றருவி, பழையகுற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    செய்தியாளர் : செந்தில்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Tenkasi, Tirunelveli

    அடுத்த செய்தி