Home /News /tenkasi /

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை - சாரல் மழையில் செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை - சாரல் மழையில் செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் உள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi | Courtalam (Courtallam)
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான பருவமழைக் காலம் ஜூன் மாத இறுதியில் தொடங்கியது. ஒரு மாதம் காலதாமதமாக தொடங்கினாலும் சீசன் களை கட்டியது. தற்போது சீசன் காலம் முடிவடையும் நேரத்திலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து பெய்து வருகின்றது. ஊருக்குள் சாரல் மழை பெய்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி அருவியில் குளிக்க 2வது நாளாக போலீசார் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான நீர்வரத்தால் அங்கு குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    மேலும் தற்போது சீசன் முடிந்த நிலையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு தமிழகம் வந்த மலையாள மக்கள் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாந்து சென்றனர்.

    புகைப்படம் எடுத்துச் செல்லும் சுற்றுலா பயணிகள்

    மேலும் அவர்கள் அருவிக்கரை ஓரமாக சாரல் மழையில் நனைந்தபடி செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்து சென்றனர்.

    செய்தியாளர் : ச.செந்தில்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Tenkasi

    அடுத்த செய்தி