Home /News /tenkasi /

சீசன் முடிந்தும் குற்றால அருவிகளில் நீர்வரத்து - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

சீசன் முடிந்தும் குற்றால அருவிகளில் நீர்வரத்து - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம்

குற்றாலம்

Courtallam Falls : தற்போது சீசன் முடிந்த நிலையிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஆர்ப்பரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சீசன் முடிந்த நிலையில் குற்றால அருவிகளில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வாரவிடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைக்கட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

    ALSO READ | விடியல் ஆட்சி என்று விலையேற்றத்தை மட்டுமே தந்துள்ளது - திமுகவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

    இந்த நிலையில் தற்போது சீசன் முடிந்த நிலையிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஆர்ப்பரித்து வருகிறது இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் இன்று வார விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணியில் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது அவ்வப்போது சாரல் மழை இல்லாவிட்டாலும் இதமான வெயில் அடிப்பதால் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : ச.செந்தில்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Courtallam, Falls, Tenkasi

    அடுத்த செய்தி