முகப்பு /செய்தி /தென்காசி / பண மழையில் குளித்த கவுன்சிலர்... லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்து தென்காசியில் விநோத ஆர்ப்பாட்டம்..

பண மழையில் குளித்த கவுன்சிலர்... லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்து தென்காசியில் விநோத ஆர்ப்பாட்டம்..

பண மழையில் குளித்த கவுன்சிலர்

பண மழையில் குளித்த கவுன்சிலர்

Tenkasi News : தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் அதிக லஞ்சம் வாங்குவதை சுட்டிகாட்டும் விதமாக அதிகாரிகள் முன் பண மழையில் குளித்து கவுன்சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். பின்னர் மன்ற பொருட்கள் வாசிக்கப்பட்டது.

இதற்கிடையே நகராட்சியில் 33 வார்டு பகுதிகளிலும் வீட்டு தீர்வை வசூல் செய்வதில் வருவாய் ஆய்வாளர் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பலமுறை புகார் அளிக்கும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், வருவாய் ஆய்வாளர் அதிக அளவு லஞ்சம் வாங்குவதை சுட்டிக்காட்டும் விதமாக 10வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ராசப்பா தான் கொண்டு வந்திருந்த வாலியில் இருந்து போலி ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதிகாரிகளுக்கு முன் குளித்தார். தொடர்ந்து லஞ்ச பண மழையில் வருவாய் அலுவலர் குளித்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.

அதிகாரிகள் முன்னிலையிலும் லஞ்சப் பணத்தை சுட்டிக்காட்டும் விதமாக கவுன்சிலர் பண மழையில் குளித்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நகர மன்ற அதிகாரியிடம் கேட்டபோது இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

செய்தியாளர் : செந்தில் - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi