Home /News /tenkasi /

தமிழகத்தில் இதுவே முதன்முறை... தென்காசி தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை

தமிழகத்தில் இதுவே முதன்முறை... தென்காசி தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை

தென்காசி தீண்டாமை விவகாரம்

தென்காசி தீண்டாமை விவகாரம்

தமிழகத்தில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் பள்ளி சிறார்கள் மீதான தீண்டாமை விவகாரம்  தொடர்பாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் 5 பேருக்கும்  6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது .

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளத்தில் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு விதித்து திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் சாதிய தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

    Also Read : மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரமாச்சந்திர மூர்த்தி,  குமார் மகேஷ்வரன் ஆகிய  குற்றவாளிகளை கைது செய்தனர் . மேலும் முருகன், சுதா ஆகிய  இருவரை தேடி வரும் நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்பநாபன்  குற்றவாளிகள் 5 பேருக்கு  6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து   உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : ஐயப்பன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi, Tirunelveli

    அடுத்த செய்தி