ஹோம் /நியூஸ் /தென்காசி /

“கொசு பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்க..” கொசுவர்த்தி பற்றவைத்து நூதன முறையில் கவுன்சிலர் விடுத்த கோரிக்கை!

“கொசு பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்க..” கொசுவர்த்தி பற்றவைத்து நூதன முறையில் கவுன்சிலர் விடுத்த கோரிக்கை!

கவுன்சிலர்

கவுன்சிலர்

கொசுக்கள் உற்பத்தியாகி பெண்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது - கவுன்சிலர் சுனிதா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி வார்டு பகுதியில் சாக்கடைகளை சுத்தம் செய்யாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவுவதாக குற்றம்சாட்டி நகர்மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் கொசுவத்தி ஏற்றி வைத்து நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சியை சார்ந்த கவுன்சிலர்களும் பங்கேற்றனர் நகராட்சி பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து 7 மன்ற பொருட்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே 23வது வார்டு பகுதியை சேர்ந்த பாஜக கவுன்சிலர் சுனிதா தங்கள் வார்டு பகுதியில் சாக்கடைகள் சுத்தம் செய்யவில்லை எனவும் இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி பெண்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கொசு பரவலை தடுக்கும் விதமாக நகர்மன்ற கூட்டத்தில் கொசுவத்தி ஏற்றி வைத்து இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

First published:

Tags: BJP, Mosquito, Tenkasi