ஹோம் /நியூஸ் /தென்காசி /

WATCH - தென்காசியில் பைக்கை வழிமறித்து 3 பேரை கடித்துக் குதறிய கரடி..! ஷாக் வீடியோ!

WATCH - தென்காசியில் பைக்கை வழிமறித்து 3 பேரை கடித்துக் குதறிய கரடி..! ஷாக் வீடியோ!

தென்காசியில் 3 பேரை கடித்து குதறிய கரடி

தென்காசியில் 3 பேரை கடித்து குதறிய கரடி

Tenkasi Bear Attack | காப்பாற்ற முயன்றபோது பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து வரும் இவர், இன்று காலை  வழக்கம்போல் கடையம் அருகேயுள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வியாபாரத்திற்கு சென்றிருந்தார்.

  அப்போது சாலையின் குறுக்கே திடீரென வந்த கரடி, அவரது இருசக்கர வாகனத்தை மறித்து கீழே தள்ளி கடித்து குதறிக்கொண்டிருந்தது. அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், காப்பாற்ற முயன்றபோது பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது. இதில் மூன்று பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

  இதையும் படிங்க : ’நீங்கள் பெரியாருக்கு நன்றி சொல்லிவிட்டுதான் கையெழுத்திடவேண்டும்’ - அண்ணாமலையை சாடிய சு. வெங்கடேசன்!

  தகவலறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்டவர்களை மீட்டு பின்னர் ஆம்புலன்ஸ்  மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ' isDesktop="true" id="831838" youtubeid="GXmDKVIYdNA" category="tenkasi">

  பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் : செந்தில் - தென்காசி

  Published by:Karthi K
  First published:

  Tags: Tenkasi, Wild Animal