ஹோம் /நியூஸ் /தென்காசி /

97 வயது மூதாட்டிக்கு சிறிய துளை மூலம் நவீன சிகிச்சை... தென்காசி அரசு மருத்துவமனை சாதனை!

97 வயது மூதாட்டிக்கு சிறிய துளை மூலம் நவீன சிகிச்சை... தென்காசி அரசு மருத்துவமனை சாதனை!

இசக்கியம்மாள்

இசக்கியம்மாள்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 97 வயது மூதாட்டிக்கு சிறிய துளை மூலம் நவீன முறையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் வடகரையை சேர்ந்த சங்கிலிமாடன் என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (97). இவருக்கு  இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்கு எலும்பு முறிவு மருத்துவர்களால்  முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மயக்க மருந்து மருத்துவர்கள், இருதய சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் ஆகியோர் உதவியுடன் இடுப்பு எலும்பிற்கு சிறிய துளை மூலம் கம்பி பொருத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது .

  Also see.. ''சமூகநீதி பொதுவானது.. 10% இடஒதுக்கீடு சரியானது'' - வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

  அறுவை சிகிச்சைக்கு பின் இசக்கியம்மாள் நலமுடன் இருந்து வருகிறார். இதனைதொடர்ந்து அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்ஸினின் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

  செய்தியாளர்: ச.செந்தில்,தென்காசி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Government doctors, Tenkasi