ஹோம் /நியூஸ் /Tenkasi /

தென்காசியில் ஐம்பொன் சிலை கடத்திய 3 பேர் கைது

தென்காசியில் ஐம்பொன் சிலை கடத்திய 3 பேர் கைது

கடத்தப்பட்ட சிலை

கடத்தப்பட்ட சிலை

Tenkasi : கடையம் அருகே உள்ள லட்சுமியூரில் தேவி சக்தி அம்மன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை கடந்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தென்காசி மாவட்டம் கடையத்தில் ஐம்பொன் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லட்சுமியூரில் தேவி சக்தி அம்மன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு ராம்நகர் பகுதியில் கடையம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

  இதனையடுத்து மூவரையும் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், கடையம் அருகே லட்சுமியூர் ரைசேர்ந்த அன்னப்பாண்டி மகன் ராஜ்குமார் (31) கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன் விளை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வினோத் என்ற முகமது நசீர் (30), தாம்பரம் அருகேயுள் சேலையூர் ரைசேர்ந்த நம்பி மகன் ரவி என்ற சமீர் (33) என்பது தெரியவந்தது.

  இவர்கள் மூவரும் தென்காசி, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியது தெரியவந்துள்ளது. மேலும், கடையம் அடுத்த லட்சுமியூரில் கடந்த 1 ஆம் தேதி இரவு ஐம்பொன் சிலையை திருடியதும் தெரிய வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஐம்பொன் சிலை கடத்தல்

  இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு அறிவுறுத்தலின் படி, தனிப்படையினர் தொடர் விசாரணை மேற்கொண்டதில் இவர்களிடம் இருந்து 6 பைக்குகள், கார், சமையல் சிலிண்டர், மற்றும் பல லட்சம் மதிப்புள்ள தேவி சக்தி அம்மன் ஐம்பொன் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  Must Read : ‘முதல்ல சாப்பிடு.. வேலைய அப்புறம் பாத்துக்கலாம், இல்லனா அடிச்சுருவேன்...’ மழலை மொழியில் ஆசிரியரை அன்பாக மிரட்டும் குழந்தை - வைரல் வீடியோ

  தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - ச.செந்தில், தென்காசி.

  Published by:Suresh V
  First published:

  Tags: Idol Theft, Tenkasi