ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசி அருகே பால் வியாபாரி 2 பேர் வெட்டி கொலை...

தென்காசி அருகே பால் வியாபாரி 2 பேர் வெட்டி கொலை...

பால் வியாபாரிகள் கொலை

பால் வியாபாரிகள் கொலை

ஆனந்த், சூரிய ராஜ் ஆகியோரின் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள  நொச்சிகுளம் கிராமத்தை  சேர்ந்தவர்கள் செல்வகுமார் மகன் ஆனந்த் (26),  முருகன் மகன் சூரியராஜ் (17).  இருவரும்  பால் வியாபாரம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரே பைக்கில் அருகில் உள்ள கிராமங்களான பலபத்ரராமபுரம், கங்கனா கிணறு மற்றும் சுற்று பகுதியில் பால் எடுத்துவிட்டு மீண்டும் இரவு 10 மணியளவில் நொச்சிகுளம் திரும்புவர்.

  நேற்று இரவு வெகு நேரமாகியும் இருவரும் ஊர் திரும்பாததால் உறவினர்கள் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து விட்டு  அவர்களை தேடி சென்றனர். அப்போது பலபத்ராமபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு பால் எடுக்க செல்லும் வழியில் மர்ம நபர்களால் தலையில்  அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு ஊத்துமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றத்துக்கான காரணம் என்ன? வேறு ஏதும் முன் விரோதம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also see... 78% பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்கள் - சிறப்பு திட்டங்களை வலியுறுத்தும் பாமக நிறுவனம் ராமதாஸ்!

  கொலையாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ச.செந்தில்,.தென்காசி 

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Milk, Murder, Tenkasi