Home /News /tenkasi /

திருமணத்தன்று வாலிபருடன் ஓட்டம்.. இளம்பெண் கழுத்தறுத்து கொலை - திடுக்கிடும் தகவல்

திருமணத்தன்று வாலிபருடன் ஓட்டம்.. இளம்பெண் கழுத்தறுத்து கொலை - திடுக்கிடும் தகவல்

இளம்பெண் கொலை

இளம்பெண் கொலை

Tenkasi | தென்காசி மாவட்டம் கடையம் அருகே இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவரின் தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India
    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ்க்கும் (24) செப்டம்பர் 1 -ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 31 -ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் இசக்கிலெட்சுமி தலைமறைவாகிவிட்டார்.

    இதுகுறித்து இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் எனது மகள் காணாமல் போய்விட்டதாக புகார் தெரிவித்தார். செப்டம்பர் 1 -ம் தேதி வெங்கடேஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ராம்குமாருக்கும் இசக்கிலெட்சுமியும் மதுரையில் திருமணம் செய்து சென்னையில் இரண்டு நாட்கள் தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ராம்குமார் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இசக்கிலெட்சுமி தனது தந்தை வீட்டிற்கு திரும்பி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6 -ந் தேதி இசக்கிலெட்சுமியை இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்து தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள துப்பாக்குடியிலுள்ள காட்டுப்பகுதி ஓடைக்கு அழைத்துச்சென்ற்ய் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்த் (22) மற்றும் அவரது உறவினர் சிவா (19) ஆகிய இருவரை இந்த கொலை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதாவது இசக்கிலெட்சுமிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட வெங்கடேசின் சகோதரர் ஆனந்த் என்பதும், திருமணத்திற்கு முந்தைய நாள் இசக்கிலெட்சமி வேறு வாலிபருடன் சென்றதால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Also see... மனைவி இறந்த சோகத்தில் டெய்லர் எடுத்த விபரீத முடிவு

    அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றொரு வாலிபருடன் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனை அடைந்து பெண்னை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்:ச.செந்தில், தென்காசி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Murder case, Tenkasi

    அடுத்த செய்தி