Home /News /technology /

தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை தூக்கி கொடுத்த ஜூம் செயலி.. எதற்காக தெரியுமா?

தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை தூக்கி கொடுத்த ஜூம் செயலி.. எதற்காக தெரியுமா?

ஆபிஸ் மீட்டிங் தொடங்கி பள்ளி வகுப்புகள் வரை அனைத்திற்குமான மற்றும் அனைவருக்குமான ஒரு தேர்வாக ஜூம் உருமாறியது.

ஆபிஸ் மீட்டிங் தொடங்கி பள்ளி வகுப்புகள் வரை அனைத்திற்குமான மற்றும் அனைவருக்குமான ஒரு தேர்வாக ஜூம் உருமாறியது.

ஆபிஸ் மீட்டிங் தொடங்கி பள்ளி வகுப்புகள் வரை அனைத்திற்குமான மற்றும் அனைவருக்குமான ஒரு தேர்வாக ஜூம் உருமாறியது.

ஜூம் ஆப் (Zoom App) - கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகி இருந்தாலும் கூட 2020 ஆம் ஆண்டு வரை இந்த வீடியோ கால் ஆப்பின் இருப்பு பலருக்கும் தெரியாது. "ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது" என்கிற டயலாக் ஜூம் ஆப்பிற்கு பொருந்தும் என்றால், அதை யாருமே மறுக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் - கோவிட்-19 தொற்றுநோய் தான்!

கொடூரமான கொரோனா பரவலானது, பாதுகாப்பாக இருப்பதற்காக நம் அனைவரையும் வீட்டிலேயே இருக்கச் செய்தது மற்றும் பிறருடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்தது. மக்கள் ஒருவருக்கொருவர் இணைந்திருக்க புதிய வழிகளை தேடிய நேரத்தில் "மே ஐ கம் இன்" என்று கெத்தாக கூறி, உள்ளே வந்து மில்லியன் கணக்கான யூசர்களை தன்வசம் ஈர்த்த ஒரு வீடியோ கால் ஆப் தான் - ஜூம்!

அதிக எண்ணிக்கையிலான யூசர்களை கையாளும் மறுபக்கம் அதிகப்படியான பாதுகாப்பு சிக்கல்களையும், அதற்கான நடவடிக்கைகளையும் ஜூம் நிறுவனம் மேற்கொண்டது. இதனொரு பகுதியாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் தன் பக் பவுண்டி புரோகிராமின் கீழ் ((Bug bounty program) செக்யூரிட்டி ரிசச்சர்களுக்கு மொத்தம் எவ்வளவு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது என்கிற விவரத்தை ஜூம் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

Also Read : ஆபீஸ்-க்கு வர சொன்னால் வேலையே வேண்டாம் - Apple நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கும் ஊழியர்கள்!

வெளியான தகவலின்படி, மொத்தம் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.13 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது மற்றும் மொத்தம் 401 ரிப்போர்ட்ஸ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பக் பவுண்டி புரோகிராம்கள் (Bug bounty programs) என்பது, அடிப்படையில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் உள்ள 'பக்'களை 'ஃபிக்ஸ்' செய்வதற்கு வெளிப்புற மூலங்களிலிருந்து உதவியை பெறும் ஒரு நடவடிக்கை ஆகும்.

இதன் கீழ், செக்யூரிட்டி ரிசச்சர்களால் கண்டறியப்பட்ட மற்றும் புகாரளிக்கப்பட்ட 'பக்'கின் தீவிரத்தின் அடிப்படையில், அவர்களின் முயற்சிக்கு வெகுமதி அளிக்கப்படும். இதன் அடிப்படையில் தான் ஜூம் நிறுவனம் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை தூக்கிவாரி கொடுத்துள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, கடந்த சில வருடங்களாகவே பல ​​அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு, வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் என்கிற நியூ நார்மல் அறிமுகமாகி, மக்கள் தங்கள் வேலையை செய்ய / கற்றலை நிகழ்த்த ஆன்லைன் டூல்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆபிஸ் மீட்டிங் தொடங்கி பள்ளி வகுப்புகள் வரை அனைத்திற்குமான மற்றும் அனைவருக்குமான ஒரு தேர்வாக ஜூம் உருமாறியது.

இந்த திடீர் புகழ் ஜூம் ஆப்பிற்கு சில சிக்கல்களையும் கொண்டு வந்தது, குறிப்பாக செக்யூரிட்டி பகுதிகளில்! ஜூம் ஆப், சைபர் அட்டாக் செய்பவர்களின் முக்கிய குறியாக மாறியது; இதை சரிசெய்ய தனக்கென ஒரு பக் பவுண்டி புரோகிராமை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்குள் ஜூம் நிறுவனம் தள்ளப்பட்டது.

ஜனவரி 2021 முதல், ஜூம் நிறுவனத்தின் பக் ரிவார்ட்ஸ் ஆனது ஒரு ரிப்போர்ட்டிற்கு 250 அமெரிக்க டாலர்கள் என்ற குறைந்த அடிப்படையிலேயே தொடங்குகின்றன, ஆனால் முக்கிய 'பக்'களை கண்டறியும் ஆராய்ச்சியாளர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படலாம். மேலும் ஒரு ரிப்போர்ட்டை சமர்ப்பித்த 14 நாட்களுக்குள் வெகுமதிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் ஒரு வலுவான பக் பவுண்டி மெக்கானிசத்தையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஜூம் நிறுவனம் மட்டுமல்ல , பல ஆண்டுகளாக, கூகுள், ஆப்பிள் மற்றும் மெட்டா (முன்னதாக பேஸ்புக்) போன்ற பல நிறுவனங்களும் கூட சுயாதீன செக்யூரிட்டி வல்லுநர்களின் உதவியை நம்பியுள்ளன.
Published by:Esakki Raja
First published:

Tags: Zoom App

அடுத்த செய்தி