ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அதிகரிக்கும் Zoom செயலி பயன்பாடு - தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிகரிக்கும் Zoom செயலி பயன்பாடு - தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Zoom App

Zoom App

பல்வேறு போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் ஸூம் செயலியின் வளர்ச்சி கொரோனாவை விட வேகமாக இருக்கிறது

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஸூம் செயலிக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவிற்கு மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் ஜூம் செயலியை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கவை தொடர்ந்து இந்தியாவும் ஸூம் செயலி நம்ப தகுந்த செயலி அல்ல என்றும் அதில் அரசின் அலுவலக கூட்டங்களை நடத்தவேண்டாம் என அறிவுறுத்தியது.  இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷ் சுக் என்பவர், ஸூம் செயலி தகவல் தொழிநுட்ப சட்டத்தை மீறுவதாகவும் தனிநபர் சார்ந்த தகவல்கள் சட்டத்திற்கு புறம்பாக சேகரிக்கப்பதாகவும் எனவே அதனை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி S A போப்தே மற்றும் நீதிபதி A S போபன்னா ,ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது குறித்து மத்திய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை குறைக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பல்வேறு நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே அலுவலக கூட்டங்கள் , அரசியல், இலக்கிய கூட்டங்களை நடத்தும் வாய்ப்பினை ஸூம் செயலி வழங்கி வருகிறது. ஸூம் சீன நிறுவனம் என்பதால் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

ஆனால் ஊரடங்கினால் மக்கள் வெளியே வராமல் தனிமைபடுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால் எல்லா நிறுவனங்களும் சரிவை சந்தித்தாலும் ஜூம் மட்டும் தொடர்ந்து மூன்று இலக்க வளர்சியை அடந்துள்ளது. மார்ச் மாதத்தில் 728 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது.

பல்வேறு போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் ஸூம் செயலியின் வளர்ச்சி கொரோனாவை விட வேகமாக இருக்கிறது. வேலையிழப்பு காலத்தில் 2000 க்கும் அதிகமான புதிய ஊழியர்களுடன் உலகமெங்கும் புதிய கிளைகளை துவங்கியுள்ளது ஸூம்.

ஸூம் செயலியை பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுவதாகவும். அது பாதுகாப்பனதல்ல எனவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அதற்குள் ஒரு நாளில் அதிகபட்சமாக 20 லட்சம் வரை பதிவிறக்கம் செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது ஸூம் செயலி.

வீட்டில் இருந்த படியே பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஸூம் செயலியில் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துள்ளனர். லட்சக்கணக்கான நிறுவனங்கள் ஜூம் செயலியில் தினமும் கூட்டங்களை நடத்துகின்றனர்.

பங்குச் சந்தையில் ஸூம் நிறுவனத்தின் மதிப்பு 41 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள தனிநபர் தகவல் குறித்த சர்ச்சையால் ஸூம் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Zoom App