வீடியோ காலுக்கான ஜூம் ஆப் பாதுகாப்பானது இல்லை - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் சூழலில் அலுவலக கூட்டம், மாணவர்களுக்கு பாடம் என பல பணிகளும் ZOOM செயலி மூலம் நடத்தப்படுகின்றன.

வீடியோ காலுக்கான ஜூம் ஆப் பாதுகாப்பானது இல்லை - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
Zoom App
  • Share this:
வீடியோ காலிங்குக்கு பயன்படுத்தப்படும் ZOOM செயலி பாதுகாப்பானது இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளது. எனவே இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்திருக்கும் நிலையில், இணையத்தில் நடக்கும் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. இதைக்குறிவைத்து சில ஹேக்கர்கள் சட்டவிரோதமாக இணைய திருட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் சூழலில் அலுவலக கூட்டம், மாணவர்களுக்கு பாடம் என பல பணிகளும் ZOOM செயலி மூலம் நடத்தப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுக்க ZOOM செயலியில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ZOOM செயலி பாதுகாப்பானது இல்லை என்றும், அது சைபர் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகும் தன்மை கொண்டது என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் படிக்க: 100 மீட்டர் தொலைவில் இருந்தே கொரோனா பாதிப்பைக் கண்டறியும் கருவி - ஈரானின் அசத்தல் கண்டுபிடிப்பு
First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading