முன்பெல்லாம் நமக்கு தேவையான உணவுகளை நாமே சமைத்து சாப்பிட்டு வந்தோம். அதன் பிறகு நமக்கு விருப்பமான சில உணவுகளை மட்டுமே கடைகளுக்கு சென்று சாப்பிட்டு வந்தோம். இந்த வழக்கம் மெல்ல மெல்ல உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கத்திற்கு மாறியது. இந்தியாவில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் முதல் பணக்காரர்கள் வரை உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் ஆர்டர் செய்வதற்கு சோமாட்டோ போன்ற முன்னணி ஆப்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தகுந்தாற்போல ஏராளமான ஆபர்களை வழங்கி சோமாட்டோ தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்கிறது. மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியான சோமாட்டோ தற்போது தனது நிறுவனத்தின் பெயரை மாற்றி உள்ளது.
இதுவரை சோமாட்டோ லிமிடெட் என்கிற பெயரில் இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போது மற்றொரு டெலிவரி ஸ்டார்ட்அப்பைப் பெறுவதற்கான ஒப்புதலைப் பெற்ற பிறகு அதன் பெயரை இடெர்னல் லிமிடேட் (Eternal Ltd) என மாற்ற உள்ளது. எனவே இந்நிறுவனம் அதன் முக்கிய வணிக பிரிவுகளை வழிநடத்த தலைமை நிர்வாக அதிகாரிகளை நியமித்து வருகிறது.
Also Read : உபெர் டிரைவர்களுக்கு இனி சவாரிக்கு எடுப்பதற்கு முன் இந்த சிக்கல் இருக்காது!
சோமாட்டோ நிறுவனமானாது ஆண்ட் குரூப் கோ., டெமாசெக் ஹோல்டிங்ஸ் மற்றும் கோல்மான் சாச்ஸ் குரூப் ஆகிய பெரு நிறுவனங்களின் மூலம் நிதியை பெற்று இயங்கி வருகிறது. Blinkit என பெயரிடப்பட்ட மளிகை விநியோக தொடக்கத்திற்கான ஒப்பந்தத்திற்குப் பிறகு, குறைந்தபட்சம் நான்கு யூனிட்களுக்கு தலைமை அதிகாரிகளை நியமிக்கும் என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமையலறை பொருட்களை வழங்கும் Hyperpure எனப்படும் முக்கிய வணிக நிறுவனத்தையும் இந்நிறுவனம் சொந்தமாக்கி உள்ளது.
Zomato நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை அதிகாரியான தீபிந்தர் கோயல் கூறுகையில், தான் ஒரு தலைமை அதிகாரியாக இருந்த இடத்திலிருந்து, Zomato, Blinkit, Hyperpure மற்றும் Feeding India போன்ற ஒவ்வொரு வணிகத்திற்கும் பல தலைமை அதிகாரிகளைக் கொண்டிருக்கும் இடத்திற்கு எங்கள் நிறுவனம் முன்னேறுகிறது என்று கூறினார். எனவே எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுவார்கள் என்றும், ஒரு பெரிய தடையற்ற அமைப்பை உருவாக்க இந்த குழு ஒரு சிறந்த குழுவாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று முதல், இந்த பெரிய நிறுவனமானது 'இடெர்னல்' என்று அழைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.