கோவிட் பாதிப்பு - விரைவாக உணவு டெலிவரி... சோமோட்டோ அறிவிப்பு!

சோமோட்டோ

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள், கொரோனா எமர்ஜென்சி என்பதை அங்கிருக்கும் ஆப்சன் மூலம் தெரியப்படுத்தினால், உணவு டெலிவரி செய்யும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் பாஸ்டஸ்ட் ரைடர் மூலம் விரைவாக உணவு டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட் எமர்ஜென்சி உள்ளவர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யப்படும் என சொமோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் அவர்களுடன் உடனிருப்பவர்களுக்கு உதவும் விதமாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமோட்டோ புதிய முன்னெடுப்பு ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது, கொரோனா எமர்ஜென்சியில் இருப்பவர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள், கொரோனா எமர்ஜென்சி என்பதை அங்கிருக்கும் ஆப்சன் மூலம் தெரியப்படுத்தினால், உணவு டெலிவரி செய்யும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் பாஸ்டஸ்ட் ரைடர் மூலம் விரைவாக உணவு டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை கொரோனா எமர்ஜென்சியில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களிடம் சொமோட்டோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு மொபைல் யூசர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ள சொமோட்டோ, கோவிட் எமர்ஜென்சி மூலம் உணவு வாங்குபவர்கள் முன்கூட்டியே கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. உணவு கொண்டுவந்து கொடுப்பவரின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், கோவிட் எமர்ஜென்சி உணவு டெலிவரி என்பது முழுவதும் தொடர்பில்லாத டெலிவரி (contactless)-யை நோக்கமாக கொண்டது எனவும் சொமொட்டோ தெரிவித்துள்ளது.

Also read... நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபில் கடும் சரிவு - முதலீட்டாளர்கள் கவலை!

கோவிட் எமர்ஜென்சி ஆப்சன் மூலம் உணவு வாங்குபவர்களுக்கு விரைவாக உணவு கொண்டு சேர்ப்பதற்காக எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லை எனக் கூறியுள்ள சொமோட்டோ, வழக்கமான உணவுக் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனக் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18-னிடம் பேசிய சொமோட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல், இதனை உறுதி செய்தார். மேலும், உணவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களின் முயற்சிக்கு முழு ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொண்ட அவர், உணவு டெலிவரி செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுக்கொண்டார். சொமோட்டோ நிறுவனத்தின் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளித்துள்ள ரெஸ்ட்ராண்ட் மற்றும் ஹோட்டல்களுக்கு திபீந்தர் கோயல் நன்றி தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களிடமும் சோமோட்டோ நிறுவனம் ஒருசில வேண்டுகோள்களை வைத்துள்ளது. கோவிட் எமர்ஜென்சி உணவு டெலிவரி ஆப்சனை, உண்மையிலேயே உணவு அவசரமாக தேவைப்படுபவர்கள் மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அனைவரும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள சோமோட்டோ, நோய் பாதிப்பில் இருப்பவர்கள் அவசரமாக உணவு தேவை என ஆர்டர் செய்வதற்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளது. இந்த ஆப்சன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் கொவிட் எமர்ஜென்சியில் இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு கொண்டு சேர்ப்பது மட்டுமே தங்களுடைய நோக்கம் என்றும் அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: