ஜொமேட்டோ நிறுவனம் ஆர்பிஎல் வங்கி உடன் இணைந்து புதிதாக க்ரெடிட் கார்டு வழங்கும் முறையைத் தொடங்க உள்ளது.
‘எடிஷன் கார்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த க்ரெடிட் கார்டு முறை உணவுப் பிரியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் திட்டமாக உள்ளது. இந்தக் க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஜொமேட்டோவில் (Zomato) லாபம் கிடைக்கும்.
கூடுதலாக ஆர்.பி.எல் வங்கியின் இந்தக் க்ரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு தொடக்க காலச் சலுகையாக இந்தியாவில் உள்ள அத்தனை உள்நாட்டு விமான நிலையங்களிலும் காத்திருப்பு அறை வசதி இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த க்ரெடிட் கார்டை நீங்கள் புதுப்பித்துக்கொண்டே இருந்தால் அத்தனைப் பயன்களும் தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.
ஜொமேட்டோ செயலி வழியாக ஒவ்வொரு முறை நீங்கள் உணவு ஆர்டர் செய்யும் போது 10 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும். கூடுதலாக ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் என்றால் 2 சதவிகித எடிஷன் கேஷ் உங்களுக்குக் கிடைக்கும். 200 எடிசன் புள்ளிகள் பெற்றதும் அதை 200 ரூபாயாக செலவழித்துக் கொள்ளலாம்.
ஆர்.பி.எல் வங்கியின் கீழ் 2.5 மில்லியன் க்ரெடிட் கார்டு பயனாளர்கள் இந்தியா முழுவதுமாக உள்ளனர்.
மேலும் பார்க்க: 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்திய போஸ்ட் பேமன்ட் வங்கி! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.