Home /News /technology /

இல்லம் என்ற தமிழ் பெயரில் குடும்ப சமூக வலைதளம்... Zoho ஸ்ரீதர் வேம்பு அசத்தல்

இல்லம் என்ற தமிழ் பெயரில் குடும்ப சமூக வலைதளம்... Zoho ஸ்ரீதர் வேம்பு அசத்தல்

Zoho

Zoho

Zillum குறித்து சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் Zillum பெயர் காரணத்தையும் விளக்கியுள்ளார்.

    குடும்ப தகவல் தொடர்பு மற்றும் தரவுகளுக்காக ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் பிரத்யேக சமூக வலைத்தளத்தை உருவாக்கி வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் (பீட்டா வெர்ஷன்) இருக்கும் இது விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிவேக இணைப்புடன் கூடிய மொபைல் போன்கள் வந்த பின்னர், அனைத்துமே தொழில்நுட்ப மயமாகிவிட்டது. தொழில்நுட்ப புரட்சியால் குடும்ப உறவுகளிடம் நேரம் செலவிடுவதும் மங்கிவிட்டது. சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பால் நட்பு வட்டம் விரிந்துவிட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் குரூப் தொடங்கி வைத்துக் கொண்டு, அதில் குடும்ப விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். வெவ்வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பத்தினரை சமூக வலைத்தளம் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் டிஜிட்டல் உலகில் உயர்தர பாதுகாப்புடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த ஆன்லைன் தளம் ஒன்றை சோஹோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    Zillum எனப்படும் அந்த மென்பொருள் தயாரிப்பானது, குடும்ப தகவலுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குடும்பத்திற்கென தனி இ-மெயில், இன்ஸ்டண்ட் மெசேஜிங், தரவுகள் சேமிப்பு தளம், பாஸ்வோர்ட் நிர்வாகம் என ஒரு குடும்ப கிளவுட் சேவையை இது தரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    Zillum குறித்து சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் Zillum பெயர் காரணத்தையும் விளக்கியுள்ளார்.  Zoho+இல்லம் என்ற சேர்க்கையே Zillum ஆகியிருக்கிறது. தமிழ் வார்த்தையான இல்லத்தை, ஆங்கிலத்தில் சோஹோ நிறுவனத்தின் Z என்ற ஆங்கில முதல் எழுத்துடன் இணைத்து இந்த தயாரிப்பை வெளிக்கொண்டு வர இருக்கின்றனர்.

    Also read:  ஜின்னா டவரில் தேசியக் கொடி ஏற்ற முயற்சி - ஆந்திராவில் பதற்றம்

    தென்காசியைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் சோஹோ நிறுவனத்தை கடந்த 1996ம் ஆண்டு தனது சகோதரருடன் இணைந்து தொடங்கினார். இன்று பல பன்னாட்டு நிறுவனங்களை மிஞ்சும் வளர்ச்சியை சோஹோ நிறுவனம் கண்டுள்ளது. இருப்பினும் இவ்வளவு பெரிய நிறுவனத்தை தென்காசியின் ஒரு கிராமத்தில் இருந்தவாறே சிஇஓ அந்தஸ்தில் இருந்து கொண்டு நிர்வகித்து வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. இவருக்கு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Sridhar Vembu, Zoho

    அடுத்த செய்தி