Home /News /technology /

அமேஸ்ஃபிட் அறிமுகப்படுத்தவுள்ள Zepp Z ஸ்மார்ட்வாட்ச்: இதன் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள்!

அமேஸ்ஃபிட் அறிமுகப்படுத்தவுள்ள Zepp Z ஸ்மார்ட்வாட்ச்: இதன் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள்!

Zepp Z ஸ்மார்ட்வாட்ச்

Zepp Z ஸ்மார்ட்வாட்ச்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் அமேஸ்ஃபிட் GTR 2 LTE என்ற ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியது. இந்த வாட்ச் ஒரு eSim வழியாக LTE அழைப்புக்கான செயல்பாட்டுடன் வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பாளரரான அமேஸ்ஃபிட்டின் (Amazfit) தாய் நிறுவனமான Zepp தனது புதிய Zepp Z ஸ்மார்ட்வாட்சை வருகிற ஜூலை 20 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சுகாதார நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் தொழில்முறை பிராண்டான Zepp, தங்களது புதிய Zepp Z ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Zepp Z ஸ்மார்ட்வாட்ச் மொத்தம் 15 நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனை அணியும் ஒருவரின் சுகாதார உயிரணுக்கள் மற்றும் பல உடற்பயிற்சி நடவடிக்கைகளை ட்ராக் செய்து அனலைஸ் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் ஒருவரது உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி நிலைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. Zepp Z ஸ்மார்ட்வாட்சில் RISC-V அணியக்கூடிய சிப் பொருத்தப்பட்டுள்ளது.

ALSO READ |  கால்களை இழந்த பூனைக்கு மருத்துவர் செய்த பேருதவி.. கிரீஸில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ. 25,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாட்ச் அமேசானில் ஜூலை 20ம் தேதி முதல் கிடைக்கும். Zepp Z வாட்ச் ஒரே துண்டு மெருகூட்டப்பட்ட டைட்டானியம் அலாயில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்க்ராட்ச் எதிர்ப்பிற்கு NTC நானோடெக் பூச்சு உள்ளது. Zepp Z ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளேவுடன் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 100% NTSC அகல-வண்ண நிறமாலையுடன் வருகிறது.Zepp Z வாட்ச் 50-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸசை வழங்குகிறது. கூடுதலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக யூசர்கள் தங்கள் சொந்த புகைப்படங்களை இதில் பதிவேற்றலாம். இதுதவிர உங்கள் இரத்த-ஆக்ஸிஜன் செறிவு, தூக்க கண்காணிப்பான், இதய துடிப்பு மானிட்டர், அழுத்த மானிட்டர் மற்றும் பலவற்றைக் கண்காணிக்க Zepp Z ஒரு SpO2 மானிட்டரைக் கொண்டுள்ளது.

ALSO READ |  5 வயது குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாததால் நீமோ தடுப்பூசியை அதிமுக அரசு செலுத்தவில்லை - அமைச்சர் மா. சுப்ரமணியன் குற்றச்சாட்டு

இந்த ஸ்மார்ட்வாட்ச் 5ATM நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது மற்றும் 90 விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது. செப் இசட் உள்ளமைக்கப்பட்ட GPS மற்றும் GLONASS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் உள்ளமைக்கப்பட்ட அமேசான் அலெக்சா அம்சத்துடன் வருகிறது. ஏற்கனவே கூறியது போல இந்த ஸ்மார்ட்வாட்ச் 15 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த புதிய வெளியீடு, ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமான அமாஸ்ஃபிட் இந்தியாவில் நுழைந்து மூன்று ஆண்டுகளை குறிக்கிறது.அதாவது, ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பாளர் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்கு வந்து Amazfit GT மற்றும் Bip சீரிஸ் போன்ற பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய குறிப்பிடத்தக்கது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் அமேஸ்ஃபிட் GTR 2 LTE என்ற ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியது. இந்த வாட்ச் ஒரு eSim வழியாக LTE அழைப்புக்கான செயல்பாட்டுடன் வருகிறது. இந்த வாட்ச்சில் புளூடூத் மற்றும் வைஃபை இணைப்போடு ஒரு வட்ட டயலும் இடம்பெற்றுள்ளது.

ALSO READ |  Budget SmartPhone: ₹ 10000-க்கும் கீழ் விற்பனையாகும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் - முழு விவரம்

அமேஸ்ஃபிட் GTR 2 LTE உலகளவில் 249 யூரோ டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது இந்தியா மதிப்புள்ள ரூ. 21,900 ஆகும். அமேஸ்ஃபிட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் மூலம் இந்த வாட்சை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாட்ச் தற்போது ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் விற்பனை செய்யப்படுகிறது. பிற நாடுகளில் இதன் விற்பனை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Smart watch

அடுத்த செய்தி