Home /News /technology /

இனி யூடியூப் வீடியோக்களில் டிஸ்லைக் கவுன்ட்டை பார்க்க முடியாது - ஏன் தெரியுமா?

இனி யூடியூப் வீடியோக்களில் டிஸ்லைக் கவுன்ட்டை பார்க்க முடியாது - ஏன் தெரியுமா?

யூடியூப்

யூடியூப்

இதன் மூலம் ஒரு யூடியூப் வீடியோவை பார்க்கும் வியூவர் பிடித்திருந்தால் அதை லைக் செய்யலாம். வழக்கம் போல குறிப்பிட்ட வீடியோவிற்கு எத்தனை லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதை எல்லா வியூவர்ஸும் பார்க்கலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இன்றைய தேதியில் சாட்டிலைட் சேனல்களை வைத்திருப்பவர்களை விட மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் யூடியூபர்ஸ் தான். தங்களுக்கு பிடித்தவற்றை வைத்து பொழுது போக்காக வீடியோ அப்லோட் செய்து கொண்டிருந்தவர்கள், பின்னர் தங்களது கடின உழைப்பை பயன்படுத்தி சிறப்பான கன்டென்ட்களை கொடுத்து இன்று லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை பெற்று அசத்தி வருகின்றனர். சராசரியாக வாரத்திற்கு 3 முதல் 4 வீடியோக்களை அப்லோட் செய்து தங்களது சப்ஸ்கிரைபர்களை உற்சாகப்படுத்தி வரும் அதே நேரத்தில், தங்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டி பெற்றோர்களையும் மகிழ்விக்க தவறுவதில்லை யூடியூபர்கள்.

பெயர், புகழ் பெற்று மக்களிடையே பிரபலமாக உதவுவதுடன் வருமானமும் தரும் யூடியூபை மிக சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் பல இளைஞர்கள் முன்னேறி வருகிறார்கள். உற்சாகம் மற்றும் உத்வேகத்துடன் உழைக்கும் பல யூடியூபர்களை சில நேரங்களில் மிகவும் ஏமாற்றமடைய செய்வது அவர்களது வீடியோக்களுக்கு விழும் டிஸ்லைக்ஸ். சில வியூவர்களுக்கு உண்மையில் அந்த வீடியோ பிடித்த காரணத்தாலோ அல்லது ஹேட்டரஸ் மூலம் வேண்டுமென்றே கொடுக்கப்படும் டிஸ்லைக்ஸ் வீடியோவிற்காக உழைத்த யூடியூபர்களை நிச்சயம் காயப்படுத்தாமல் இருக்காது.

ஒரு சில வியூவர்கள் வீடியோவை பார்க்கும் முன் அதற்கு கிடைத்திருக்கும் டிஸ்லைக்ஸ் கவுன்ட்டை பார்த்து விட்டு, சரி வீடியோ நன்றாக இருக்காது போல என்று நினைத்து கொண்டு அதனை ஸ்கிப் செய்து விட்டு செல்லும் சம்பவங்களும் நிகழும். இந்நிலையில் யூடியூப் கிரியேட்டர்களை மனஉளைச்சல் மற்றும் டார்கெட் அட்டாக் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்க தனது தளம் முழுவதும் உள்ள அனைத்து வீடியோக்களிலும் டிஸ்லைக் எண்ணிக்கையை பொதுமக்களுக்கு அதாவது வியூவர்ஸுக்கு காட்டுவதை நிறுத்துவதாக யூடியூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also read... மொபைலில் இன்டர்நெட் இல்லாமலே வாட்ஸ்அப் செயலியை உங்கள் லேப்டாப்பில் எப்படி பயன்படுத்துவது?

இதன் மூலம் ஒரு யூடியூப் வீடியோவை பார்க்கும் வியூவர் பிடித்திருந்தால் அதை லைக் செய்யலாம். வழக்கம் போல குறிப்பிட்ட வீடியோவிற்கு எத்தனை லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதை எல்லா வியூவர்ஸும் பார்க்கலாம். அதே சமயம் குறிப்பிட்ட வீடியோவை ஒரு வியூவர் டிஸ்லைக் செய்தால் நேரடியாக அது கிரியேட்டர்களுக்கு மட்டுமே தெரியும். ஒருவர் ஒரு வீடியோவை டிஸ்லைக் செய்தபிறகு feedback shared with the creator என்று அவருக்கு ஸ்கிரீனில் தோன்றும். அதே சமயம் பிற வியூவர்ஸிற்கு குறிப்பிட்ட வீடியோவிற்கு எத்தனை டிஸ்லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதற்கான கவுன்ட் தெரியாது.

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள YouTube, "பார்வையாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இடையே மரியாதைக்குரிய தொடர்புகளை மேம்படுத்த விரும்புகிறோம். தங்களது இந்த புதிய அப்டேட் பிடிக்காதவர்களால் வேண்டுமென்றே குறி வைக்கப்படும் சிறிய கிரியேட்டர்களுக்கு பெரிதும் உதவும். டிஸ்லைக் பட்டனை முழுவதுமாக நீக்காமல், அதே சமயம் கிரியேட்டர்களுக்கு மட்டுமே டிஸ்லைக்ஸ் கவுன்ட்ஸ் தெரியும்படி செய்து இருக்கிறோம். இது சில பொது அவமானங்களை தடுக்க உதவும்" என்று கூறி இருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Youtube

அடுத்த செய்தி