Home » News » Technology » YOUTUBE WENT DOWN AROUND THE WORLD YUV

YouTube Down: உலகம் முழுவதும் யூடியூப் சேவை சிறிது நேரம் முடங்கியது

கணினி, மொபைல் என எந்த கருவிகளிலும் யூடியூப் இயங்காததால், பயனர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

YouTube Down: உலகம் முழுவதும் யூடியூப் சேவை சிறிது நேரம் முடங்கியது
யூடியூப்
  • Share this:
மிகப்பெரிய வீடியோ தளமான யூடியூப் இணையதளம் இன்று அதிகாலை சிறிது நேரம் முடங்கியதை அடுத்து, பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் நாள்தோறும் அப்லோட் செய்யப்படும் மிகப்பெரிய வீடியோ தளமாக யூடியூப் விளங்குகிறது. இதில், அப்லோட் செய்யப்படும் வீடியோக்களுக்கு பார்வைகளை பொறுத்து வருவாய் ஈட்டும் வசதியும் உள்ளதால், பெரும்பாலான வீடியோ கிரியேட்டர்கள் யூடியூப்பை நம்பியுள்ளனர். அதே போல், பார்வையாளர்களும் எளிதாக கையாளக்கூடிய செயலியாக யூடியூப் இருப்பதால், பெரும்பாலானோர் யூடியூப் தளத்தையே விரும்புகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை யூடியூப் தளம் முடங்கியது. கணினி, மொபைல் என எந்த கருவிகளிலும் யூடியூப் இயங்காததால், பயனர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனிடையே, யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், சரி செய்து கொண்டிருப்பதாக பதிவிட்டதை அடுத்து, சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிறகு சிறிது நேரத்தில் வழக்கம் போல் யூடியூப் இயங்க ஆரம்பித்தது.



யூடியூப் சேவை முடக்கத்தை அடுத்து, ட்விட்டரில் #YouTubeDown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories