யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள்... மாயமாகும் இந்திய சேனல்கள்..!

இதுதொடர்பான பல புகார்கள் ட்விட்டர் மூலம் யூட்யூப் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர் கிரியேட்டர்கள்.

யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள்... மாயமாகும் இந்திய சேனல்கள்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 25, 2019, 2:41 PM IST
  • Share this:
சர்வதேச ஹேக்கர்களின் பார்வை தற்போது இந்திய யூட்யூப் சேனல்கள் மீது உள்ளது. சமீப காலமாக யூட்யூப் தளத்திலிருந்தே இந்திய யூட்யூப் சேனல்கள் மாயமாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

ZDNet என்னும் நிறுவன ஆய்வின் அடிப்படையில் ஹேக்கர்கள் ஃபிஷிங் மெயில்கள் மூலம் யூட்யூப் தளத்தில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களை ஹேக் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் பல யூட்யூப் கிரியேட்டர்களின் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டு காணாமல் போயுள்ளன.

இதுதொடர்பான பல புகார்கள் ட்விட்டர் மூலம் யூட்யூப் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர் கிரியேட்டர்கள். மிகவும் பலவீனமான அக்கவுண்ட்-கள் சைபர் க்ரைம் குற்றங்களுக்கு எளிதான இரையாகின்றன. யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள் Modlishka என்னும் ஃபிஷ்ங் டூல் ஒன்றைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.


’ஒன் டைம் பாஸ்வேர்டு போன்ற பல தொழில்நுட்ப அப்டேட்களை யூட்யூப் அளிக்க வேண்டும். ஒவ்வொரு 30 முதல் 90 விநாடிகளுக்குள் பாஸ்வேர்டு எண்கள் மாறிக்கொண்டே இருப்பது போன்ற அப்டேட் இருந்தால் இதுபோன்ற குற்றங்களில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் ஹேக்கர் ஒன் மேலாளர் பில் லும்மிஸ்.

மேலும் பார்க்க: காலநிலை போராட்டத்துக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டம் - கூகுள், அமேசான் ஊழியர்கள் பங்கெடுப்பு!

என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்