ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

யூடியூப் கேமிங் ஆப் நிறுத்தம் - கூகுள் திடீர் முடிவு

யூடியூப் கேமிங் ஆப் நிறுத்தம் - கூகுள் திடீர் முடிவு

யூடியூப் கேமிங் அப்ளிகேஷன்

யூடியூப் கேமிங் அப்ளிகேஷன்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  யூடியூப் வீடியோ பிளாட்பார்மில் விளையாட்டுகளை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும். கேம்மை நேரலை செய்து விளையாடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும், அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் யூடியூப்பில் அதிகம்.

  அவர்களுக்காகவே யூடியூப் கேமிங் (YouTube gaming) என்ற பெயரில் தனி ஆப்பை 2015ஆம் ஆண்டு உருவாக்கி வெளியிட்டது கூகுள்.

  இதனை 2019 மார்ச் மாதத்தில் முற்றிலுமாக நிறுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலாக, இந்த பிரத்யேக கேம் வீடியோ வசதியை யூடியூப்பில் ஒரு பகுதியாக கூகுள் வழங்குகிறது.

  இது தொடர்பான அறிவிப்பை யூடியூப் பிளாக்கில் வெளியிடப்பட்டுள்ளது. கேம் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினமும் 200 மில்லையனை தாண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Game Applications, Game Video, Google, Video, Youtube