ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஷார்ட்ஸ் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த யூடியூப்

ஷார்ட்ஸ் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த யூடியூப்

மாதிரி படம்

மாதிரி படம்

Youtube Shorts | க்ரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் என்ன முறையில் பணம் ஈட்ட விரும்புகிறார்களோ, அதற்கு ஏற்ப ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு அதன் மூலம் மற்றும் பல புதிய வாய்ப்புகளை பெற முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இதற்கு முன்னர் வரை சாதாரணமாக மக்கள் பார்க்கும் முழு நேர வீடியோக்களை பதிவிடுவோர்களுக்கு மட்டுமே அவர்களது பார்வையாளர்கள் வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் பணம் ஈட்டும் வசதியை யூடியூப் வழங்கி வந்தது. இதன் காரணமாகவே பல்வேறு நபர்களும் தங்களுக்கு என புதிய யூடியூப் சேனல்களை துவங்கி மக்களை கவரும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு, அதிக சப்ஸ்கிரைப்ர்களை பெருக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தனர்.

தற்போது முழு நேர வீடியோக்களை விட யூடியூப் ஷார்ட்ஸ் எனும் 30 நொடி முதல் 1 நிமிடம் வரை செல்லும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்று வருகின்றன. எனவே இந்த யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் பணம் ஈட்டும் வசதியை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாகவே யூடியூப் கிரியேட்டர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

தற்போது டெக் ஜாம்பவானான கூகுள், யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம் (YPP) என்ற திட்டத்தின் மூலம் ஷார்ட்ஸ் மானிடைசேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் யூடியூப் கிரியேட்டர்கள் தங்களது ஷார்ட்ஸ் வீடியோக்களின் மூலமே விளம்பரங்களை காண்பித்து, அதன் மூலம் பணம் ஈட்ட முடியும். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த வசதி யூட்யூப் தளத்தில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யூடியூப் க்ரியேட்டர்கள் புதுவிதமான வழிகளில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் க்ரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் என்ன முறையில் பணம் ஈட்ட விரும்புகிறார்களோ, அதற்கு ஏற்ப ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு அதன் மூலம் மற்றும் பல புதிய வாய்ப்புகளை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ச் பேஜ் மானிடைசேஷன், ஷார்ட்ஸ் மானிடைசேஷன், காமர்ஸ் ப்ராடக்ட் அடேண்டம் என்பதாகும். இதில் வாட்ச் மானிடைசேஷன் என்பதன் மூலம், விளம்பரங்கள் மற்றும் யூடியூப் ப்ரீமியத்தின் மூலம் வரும் வருமானம் அல்லது லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் போது எத்தனை பேர் அதனை பார்க்கின்றனர் என்பது மூலம் வரும் வருமானத்தை கிரியேட்டர் பெற முடியும்.

ஷார்ட் மானிடைசேஷன் மாடல் என்பதன் மூலம் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு இடையே காண்பிக்கப்படும் விளம்பரங்களின் மூலம் யூடியூப் பணம் ஏற்ற முடியும். காமர்ஸ் ப்ராடக்ட் அடேண்டம் என்ற ஒப்பந்தத்தை தேர்வு செய்திருந்தால், இவர்கள் இப்போது புதிதாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் தேர்வு செய்ய வேண்டியது இல்லை. இவர்களுக்கு விளம்பரத்திற்கு பதிலாக அந்த சேனலின் ரசிகர்கள் அளிக்கும் நிதியின் மூலம் பணம் ஈட்டுகிறார்கள்.

இந்த யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமில் இணைவதற்கும், அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கும் சில அடிப்படை தகுதிகளை யூடியூப் கிரியேட்டர்கள் பூர்த்தி செய்து இருக்க வேண்டும் என்பது யூடியூப் நிறுவனத்தின் விதிமுறை ஆகும். மேலும் இந்த புதிய திட்டத்தில் இணைவதற்கு ஜூலை 10, 2023 வரை காலக்கெடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதற்குள்ள அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒப்பந்தத்தை தேர்ந்தெடுக்கவில்லை எனில் அவர்களது சேனல் யூடியூப்பில் இருந்து நீக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Technology, Youtube