ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

YouTube Premium : யூடர்ன் அடித்த யூடியூப்... ஃபுல் குஷியான யூஸர்கள்!

YouTube Premium : யூடர்ன் அடித்த யூடியூப்... ஃபுல் குஷியான யூஸர்கள்!

யூடியூப்

யூடியூப்

Youtube Premium | பிரீமியம் செலுத்தாத யூஸர்களுக்கு 12 பேக்-டு-பேக் விளம்பரங்களை இணைப்பது தொடர்பான சோதனை முயற்சியில் யூடியூப் நிறுவனம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் தனது வருவாயை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது ஒன்றிண்டு வீடியோக்களில் விளம்பரங்கள் ப்ளே ஆன நிலையில், தற்போது அனைத்து வீடியோக்களிலும் 2 முதல் 6 விளம்பரங்கள் வரை ஒளிபரப்பாகி வருகின்றன. விளம்பரங்களின் தொல்லை இன்று யூ-டியூப் வீடியோக்களை கண்டு ரசிக்க விரும்பும் யூஸர்களுக்காக யூ-டியூப் பிரீமியம் சந்தாவைக் கொண்டு வந்தது.

  இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் ரூ.129-யை செலுத்துவதன் மூலமாக விளம்பரமில்லா வீடியோக்கள், ஆஃப் லைனில் வீடியோக்களை டவுன்லோடு செய்து பார்ப்பது போன்ற வசதிகளை வழங்கி வருகிறது.

  இந்நிலையில் சந்தாதாரர்கள் மட்டும் யூடியூப்பில் பிரத்தியேகமாக 4K வீடியோக்களை கண்டு ரசிக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனை முயற்சியில் யூ-டியூப் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  உண்மையில், 4k (4k தெளிவான வீடியோக்கள்) வீடியோக்களை காண பிரீமியம் சந்தா கட்டாயம் என்றோ அல்லது அந்த முறையை சோதித்து வருவதாகவோ யூடியூப் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் சில பயனர்கள் 4K வீடியோக்களைப் பார்க்க சந்தா கட்டாயம் என்று அறிவிப்பு வந்திருப்பதாகக் சோசியல் மீடியாக்களில் தகவல்களை பரப்பியுள்ளனர். சில நெட்டிசன்கள் ட்விட்டர், ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பி வரும் தகவல்களும், ஐபோன்களில் எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டு வரும் ஸ்கிரீன்ஷாட்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  பேக் டூ பேக் விளம்பரம்:

  பிரீமியம் செலுத்தாத யூஸர்களுக்கு 12 பேக்-டு-பேக் விளம்பரங்களை இணைப்பது தொடர்பான சோதனை முயற்சியில் யூடியூப் நிறுவனம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. சில இந்திய யூஸர்களின் இலவச யூடியூப் கணக்கில் 4K வீடியோக்களை காண "பிரீமியம் மட்டும்" (Premium-only) என்ற ஆப்ஷன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ப்ரீயாக யூ-டியூப் சேவையை பயன்படுத்துவோர் 4K ரெசல்யூஷனில் வீடியோக்களை காண்பதை யூடியூப் முடக்கி வருவதாக வெளியான தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

  யூ-டர்ன் அடித்த யூ-டியூப்:

  இந்நிலையில் யூடியூப் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் சோசியல் மீடியாவில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. 4K வீடியோக்களை முடக்குவது தொடர்பான பரிசோதனைகளை நிறுத்திவிட்டதாகவும், இப்போது இந்திய யூஸர்கள் எவ்வித சந்தா தொகையும் செலுத்தாமல் 4Kதெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களை பார்க்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.

  இருப்பினும் இதற்கு முன்னதாக யூ-டியூப் நிறுவனம் டெலிட் செய்த ட்விட்டர் பதிவுகளில் பிரீமியம் மற்றும் பிரீமியம் அல்லாத பார்வையாளர்களுக்கான விருப்பத்தேர்வுகளை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது உறுதியாகியுள்ளது.

  Read More: Netflix செய்யும் அதிரடி மாற்றங்கள்... இனி இந்த ஆப்ஷனுக்கு வாய்ப்பு இல்ல ராஜா

   இந்திய பார்வையாளர்களைப் பொறுத்தவரை சந்தா செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு 4K வீடியோ சேவை முடக்கப்படும் என்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவிய போதும், தரமான வீடியோக்களை உருவாக்கும் கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களது வீடியோக்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே யூ-டியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் பயனளிக்கும் வகையில், வீடியோக்களில் விளம்பரங்களை அதிகரிப்பது தொடர்பான சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Youtube, Youtube viewers