முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அடடா... இனி யூடியூப் ஷார்ட்ஸ் உருவாக்குவது இவ்வளவு சுலபமா ?

அடடா... இனி யூடியூப் ஷார்ட்ஸ் உருவாக்குவது இவ்வளவு சுலபமா ?

காட்சி படம்

காட்சி படம்

யூட்யூப் ஷார்ட்ஸ் என்பது கூகுளுக்கு சொந்தமான இந்த வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்மின் ஷார்ட் ஃபார்மட் வீடியோக்கள் (Short Format Videos) ஆகும்.

கலிபோர்னியாவின் சான் புருனோவை தலைமையிடமாகக் கொண்ட ஆன்லைன் வீடியோ ஷேரிங் மற்றும் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம் ஆன யூட்யூப், இப்போது கிரியேட்டர்கள் தங்கள் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்காக பில்லியன் கணக்கான யூட்யூப் வீடியோக்களிலிருந்து கிளிப்களை பயன்படுத்த அனுமதிப்பதாக அறிவித்துள்ளது. யூட்யூப் நிறுவனம் இந்த தகவலை ஒரு பிளாக்போஸ்ட் வழியாக அறிவித்துள்ளது.

யூட்யூப் ஷார்ட்ஸ் என்பது கூகுளுக்கு சொந்தமான இந்த வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்மின் ஷார்ட் ஃபார்மட் வீடியோக்கள் (Short Format Videos) ஆகும். அதாவது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற சிறிய வீடியோக்கள் ஆகும். இவை 60 வினாடிகளுக்கு மட்டுமே நீளவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.

தற்போது ​​கிரியேட்டர்கள் தங்களின் ஷார்ட் ஃபார்மட் வீடியோக்களில் பயன்படுத்த, தகுதியான லாங் பார்மட் வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ்களில் இருந்து 1 முதல் 5 வினாடிகள் வரை ஸ்ப்ளைஸ் (Splice) செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரியேட்டர்கள் பிளாட்பார்மில் உள்ள மற்ற வீடியோக்களிலிருந்து ஷார்ட் ஆடியோ கிளிப்களை மட்டுமே பிரிக்க முடிந்தது, இப்போது வீடியோ கிளிப்களையும் பிரிக்க முடியும்.

ஒரு யூசர் மற்றொரு வீடியோவின் கிளிப்பைப் பயன்படுத்தி ஒரு ஷார்ட்ஸ்-ஐ உருவாக்கும் போது, ​​குறிப்பிட்ட ஒரிஜினல் வீடியோவானது ஒரு 'லிங்க்' வழியாக 'கிரெட்' செய்யப்படும். இப்படியாக ரீமிக்ஸ் செய்யக்கூடிய வீடியோக்களின் 'லைப்ரரி' மிகவும் பெரியது, அதே சமயம் கிரியேட்டர் தங்கள் கன்டென்ட்-ஐ ரீமிக்ஸ் செய்வதிலிருந்து விலக்குவதற்கான விருப்பமும் அணுக கிடைக்கும். இந்த புதிய அம்சம் தற்போது ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டுமே வெளிவருகிறது, மறுகையில் உள்ள ஆண்ட்ராய்டு யூசர்ர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

also read : அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்.. ஃபைல் ஷேரிங்... WhatsApp அறிமுகம் செய்ய இருக்கும் 5 புதிய வசதிகள்..

யூட்யூப் ஷார்ட்ஸில் அணுக கிடைக்கும் இந்த புதிய அம்சமானது பிற ஷார்ட் ஃபார்மட் வீடியோ ஆப்களில் வழங்கப்பட்ட அம்சத்தைப் போன்றது தான். அதாவது ரீல்ஸ்களை உருவாக்க இன்ஸ்டாகிராமில் அணுக கிடைக்கும் ரீமிக்ஸ் (Remix) அம்சத்தை போன்றது அல்லது டிக்டாக்கின் ஸ்டிட்ச் (Stitch) அம்சத்தை போன்றது.

பில்லியன் கணக்கான யூட்யூப் வீடியோக்களுக்கான அணுகலை பெற கிரியேட்டர்களை அனுமதிப்பதும் யூட்யூப் நிறுவனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அறிவிப்பு ஆகும். கிரியேட்டர்களின் கன்டென்ட் வைரலாகி, யூடியூப்பில் பிறரால் ரீமிக்ஸ் செய்யப்பட்டால், அது அவர்களுக்கு லாபம் ஈட்டும் வாய்ப்பை மேலும் அதிகமாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த புதிய அம்சத்தின் அறிவிப்போடு சேர்த்து, ஷார்ட்ஸ் இப்போது யூட்யூப் இணையதளத்திலும், யூடியூப் டேப்லெட்டிலும் பார்க்கக் கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

also read : பட்ஜெட் அதிகம் என்றாலும் இந்த ஸ்மார்ட் போன்களை நம்பி வாங்கலாம்..

ஆப்பிளின் ஆப் ட்ராக்கிங் டிரான்ஸ்பரன்சி அம்சத்தின் காரணமாக, இணையதளங்கள் மற்றும் ஆப்கள் வழியாக யூசர்களை கண்காணிப்பது அனுமதிக்கப்படாததால், யூட்யூப் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விளம்பர வருவாயை இழந்துள்ளதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பிட்ட ஐஓஎஸ் அம்சம் ஆனது ஆப்பிளின் ஐஓஎஸ்14.5 அப்டேட் வழியாக அணுக கிடைக்கிறது.

First published:

Tags: Youtube