• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • சொந்த வீடியோவுக்கு இந்த அடியா...! மோசமான சாதனையைப் படைத்த யுடியூப்

சொந்த வீடியோவுக்கு இந்த அடியா...! மோசமான சாதனையைப் படைத்த யுடியூப்

யுடியூவ் வெளியிட்ட 2018 ரீவைண்ட் வீடியோ

யுடியூவ் வெளியிட்ட 2018 ரீவைண்ட் வீடியோ

டிசம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட்ட 2018 ரீவைண்ட் வீடியோ மிக மிக சுமாராக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ரீவைண்ட் வீடியோவை கலாய்த்து பல வீடியோக்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
2018-ம் ஆண்டின் நிகழ்வுகள் என்ற பெயரில் யுடியூப் வெளியிட்ட ரீவைண்ட் வீடியோ, அதிகம் டிஸ்லைக் (பிடிக்கவில்லை) செய்யப்பட்ட வீடியோ என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

பிரபல வீடியோ தளமான யுடியூப் உலகம் முழுவதும் அதிகம் உயயோகப்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தளத்தை, 2006-ம் ஆண்டு கூகுள் தனது வசப்படுத்தியது. தற்போது வரை யுடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன.

நெட்பிளிக்ஸ் போன்ற தளங்கள் போட்டிக்கு வந்துவிட்டதால், யுடியூப் நிறுவனமும் பல மாற்றங்களை செய்து வருகிறது. ஓவ்வொரு ஆண்டு இறுதியிலும் ரீவைண்ட் என்ற வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

ஆண்டின் முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தொகுப்பாக அந்த வீடியோ இருக்கும். யுடியூப்பில் அதிகம் பேசப்பட்ட வீடியோக்களை கலந்து கட்டி ரீவைண்ட் வீடியோவை வெளியிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு யுடியூப் வெளியிட்ட ரீவைண்ட் வீடியோவே அதிகம் பேசப்பட்டதாக ஆகிவிட்டது.

டிசம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட்ட 2018 ரீவைண்ட் வீடியோ மிக மிக சுமாராக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ரீவைண்ட் வீடியோவை கலாய்த்து பல வீடியோக்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

2018 ரீவைண்ட் வீடியோ:



2010-ம் ஆண்டு வெளியான பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரின் ‘பேபி’ என்ற பாஃப் ஆல்பமே, அதிகம் பேரால் டிஸ்லைக் (பிடிக்கவில்லை) செய்யப்பட்ட வீடியோ என்ற சாதனையை வைத்திருந்தது. தற்போது, ரீவைண்ட் வீடியோ வெளியான 8-வது நாளிலே அந்த சாதனையை முறியடித்துள்ளது.

சுமார் 1.3 கோடி பேர் 2018 ரீவைண்ட் வீடியோவை டிஸ்லைக் செய்துள்ளனர். இது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும், யூசர்களின் இந்த மோசமான வரவேற்பைப் பெற்ற யுடியூப், “ஆதரித்த எல்லாருக்கும் நன்றி. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக வீடியோவை வெளியிடுகிறோம்” என்று ட்வீட் செய்துள்ளது.





பேபி ஆல்பம் 2010-ல் வெளியாகி தற்போது வரை டிஸ்லைக் பெற்றாலும் அது 1 கோடியை தாண்டவில்லை. ஆனால், 8 நாட்களில் ரீவைண்ட் வீடியோ 1 கோடி டிஸ்லைக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: