இலவசமாக 100 ஹாலிவுட் படங்கள் - அசத்தும் யுடியூப்!

நெட்பிளிக்ஸ் போன்ற தளங்கள் அதிகளவில் வந்துவிட்டதால் சந்தையில் போட்டியை சமாளிக்க யுடியூப் அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றது.

Web Desk | news18
Updated: November 19, 2018, 10:17 AM IST
இலவசமாக 100 ஹாலிவுட் படங்கள் - அசத்தும் யுடியூப்!
யுடியூப்
Web Desk | news18
Updated: November 19, 2018, 10:17 AM IST
பயனர்கள் எந்தவித கட்டணமின்றி பார்க்கும் விதமாக 100 ஹாலிவுட் படங்களை யுடியூப் அறிமுகம் செய்துள்ளது. எனினும், இந்த படங்களில் விளம்பரங்கள் கட்டாயம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வீடியோ இணையதளமான யுடியூப்-ஐ தினந்தோறும் பல கோடி பயனர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். பல்வேறு வீடியோக்களை இலவசமாக தரும் யுடியூப், திரைப்படங்களுக்கு கட்டணம் வசூலிக்கிறது.

தற்போது, நெட்பிளிக்ஸ் போன்ற பல தளங்கள் வந்துவிட்டதால் சந்தையில் தனது மதிப்பை தக்கவைக்க, யுடியூப் பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.

ராக்கி, டெர்மினேட்டர், ஸூ கீப்பர் போன்ற 100 ஹாலிவுட் திரைப்படங்களை பயனர்கள் இலவசமாக பார்க்கலாம் என்ற வசதியை யுடியூப் கொண்டுவந்துள்ளது.

இதற்கு முன்னதாக கட்டணம் செலுத்தி பார்க்கும் விதமாக இருந்த இந்த திரைப்படங்களை பயனர்கள் இலவசமாக விளம்பரங்களுடன் பார்க்கலாம். பிரிமீயர் சந்தாதாதர்கள் விளம்பரங்கள் இன்றி படத்தை இலவசமாக பார்க்க முடியும்.

Also See.. 

First published: November 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...